பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 செளந்தர கோகிலம்

அவர்களெல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த கலியான தினம் நெருங்கியது. அந்த தினத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னரே செளந்தரவல்லியும் புஷ்பாவதியும் நகசிகை பரியந்தம் நrத்திரச் சுடர்கள்போல இருந்த வைர ஆபரணங்களையும், தகத் தகாயமாக மின்னிய தங்கப் பாளங்கள் போலிருந்த ஜரிகைச் சேலைகளையும் அணிந்து மை தீட்டிப் பொட்டுகளின்மேல் பொட்டிட்டு பலவகைப்பட்ட புதிய நாகரிகப் பின்னல்களால் தமது அளகபாரத்தை அழகுபடுத்தி உயர்ந்த ஜாதிப் புஷ்பங் களைச் சூட்டிக் கொண்டு வெகு சுந்தரமாகவும், வசீகரமாகவும் அற்புத தேஜஸோடும் உல்லாஸ்மாக இருக்கத் தொடங்கினர். தாம் பூலோகத்திலிருப்பதையே அவர்கள் மறந்து சுவர்க்க லோகத்தில் இருப்பதாகவே எண்ணிப் பூரித்து மெய்ம்மறந்து போயிருந்தனர். அதுபோலவே சுந்தரமூர்த்தி முதலியாரும் ஏராளமான ஆபரணங்களாலும், உயர்ந்த ஆடைகளாலும் தம்மை அலங்கரித்துக் கொண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே மணப்பந்தலில் உட்கார ஆயத்தமாய்விட்டார். சுந்தரமூர்த்தி முதலியார் நிரம்பவும் திறமையாக நடந்து கொண்டமையால், பூஞ்சோலையம்மாளைச் சேர்ந்த பந்து ஜனங்களுள் பெரும் பாலோரும் வந்து சேர்ந்தனர். அன்று காலையிலேயே எல்லோரும் மைலாப்பூராரது பங்களாவிற்குப் போய் அன்றைய இரவில் நிச்சயதார்த்தம் முதலிய பூர்வாங்கங்களையெல்லாம் நிறை வேற்றி விடுவதென்ற தீர்மானத்துடன் இருந்தனர். ஆதலால், அன்றைய தினம் காலையில் சுமார் இருபத்தைந்து மோட்டார் வண்டிகள் வந்து சேர்ந்தன. பூஞ்சோலையம்மாள், அவளது பந்து ஜனங்கள், பணிமக்கள், கலியாண வதுரவரர்கள், சுந்தரமூர்த்தி முதலியாரைச் சேர்ந்தவர்கள் முதலியோர் சுமார் அறுபது ஜனங்கள் புறப்பட்டுப் போய் மைலாப்பூரையடைந்து புதிய சம்பந்தியின் பங்களாவில் தங்களுக்காகப் பிரத்தியேகமாய் ஒழித்துவிடப்பட்டிருந்த பாகத்தில் இறங்கினர். -

புஷ்பாவதிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த இடம் உண்மையில் அவர் கூறியபடி மகா சிறப்பு வாய்ந்த மிகமிக உயர்வான இடம். பூஞ்சோலையம்மாளது பங்களாவைவிட அது நான்கு மடங்கு அதிக விசாலமானதாகவும், பன்மடங்கு அதிகரித்த அலங்காரமும் வேடிக்கைப் பொருட்களும் நிறைந்ததாகவும் இருந்தது.