பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 197

கொண்டிருந்தனர். புஷ்பாவதி எப்படியாகிலும் தனது மணாளனை ஒரு முறையாகிலும் பார்த்துவிட வேண்டுமென்று நினைத்து மேல்மாடத்தில் அவர் இருந்த விடுதியில் தனது பார்வையைச் செலுத்தி, அவரைத் திருட்டுத் தனமாகப் பார்த்துவிட்டாள். அழகுத் திரளாக இருந்த அவரது வசீகர வடிவம் அவளது மனத்தில் புகைப்படம் போலப் பதிந்து போகவே, அவள் அதையே மனனம் செய்து, அதனால் உண்டான இன்பத் தேனை அருந்தியபடி இரவு முழுதும் தூக்கமின்றி ஆநந்த சாகரத்தில் மிதந்து கிடந்தாள். அதுபோலவே, அழகிய மணவாள முதலியார் என்னும் யெளவனப் புருஷர் தாம் எந்தக் கட்டழகியின் படத்தைக் கண்டு காதலுற்று உருகித் தத்தளித் தாரோ அந்த அதியற்புத ரூபலாவண்ய மடவன்னத்தின் நிஜவடிவத்தை எப்போது பார்த்து ஆநந்திக்கப் போகிறோம் என்று எண்ணி எண்ணிக் கட்டிலடங்காத விரக வேதனை அடைந்து எவ்விடத்திலும் இருக்கை கொள்ளாமல் ஆடைகளால் மறைத்துக் கொண்டு கும்பலில் புகுந்து, துரத்திலிருந்தபடி முத்துப் பந்தலின் கீழிருந்த இரண்டு மணப்பெண்களையும் பார்த்தார். தாம் படத்தில் கண்ட வடிவம் இன்னம் பதினாயிரம் மடங்கு அதிகரித்த எழிலும், ஜோதியும், அலங்காரமும் வாய்ந்தவளாய் நாணித் தலைகுனிந்து உட்கார்ந்திருந்ததான கண்கொள்ளாத வசீகரக் காட்சியைக் கண்டு, “ஆகா! என் பாக்கியமே பாக்கியம்! இவ்வளவு அபாரமான அழகோடு கூடிய பெண் இந்த உலகத்தில் வேறு எவருக்கும் வாய்த்திருக்க மாட்டாள். என் சிநேகிதனான சுந்தரமூர்த்தியைக் கட்டிக் கொள்ளப்போகிற பெண்ணுக்கு குறைந்தது இருபது வயசாவது இருக்கலாமென்று நினைக்கிறேன். அவளும் அழகாயிருக்கிறாள். ஆனாலும், இவளுடைய காலழகுக்குக்கூட அவள் இணையாக மாட்டாள். மற்ற எந்த அம்சத்திலும், சுந்தரமூர்த்தி எனக்கு ஈடல்லவானாலும், இந்தப் பெண்ணின் அதிருப லாவண்யத்தை உத்தேசித்தே நான் இந்தச் சம்பந்தத்திற்கு இசைந்தேன். நான் இப்போது நேரில் பெண்ணைப் பார்த்ததில், என் மனம் பூரித்துப் பொங்குகிறதேயன்றி அதிருப்தி யடையக் காரணமில்லை. இந்தப் பெண்ணோடு நான் தனியாக இருந்து பூர்த்தியான சந்தோஷமடையுங்காலம் வர, குறைந்தது இன்னும் இரண்டு தினங்களாவது பிடிக்கும். அது வரையில்,