பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 2O1

ஆவலாகவும் திகிலோடும் கேட்டபடி ஸ்தம்பித்து நின்று விட்டனர். அழகிய மணவாள முதலியார் தமது ஆசனத்தை விட்டுச் சரேலென்று எழுந்து நின்று கமிஷனரை நோக்கி கம்பீரமாக நிமிர்ந்து நின்று, “போய் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஏதாவது சங்கதி இருந்தால், பிறகு பேசிக் கொள்ளலாம்” என்றார். உடனே கமிஷனர் பொறுமையாகவும், சாந்தமாகவும் இருந்தபடி அழகிய மணவாள முதலியாரை நோக்கி, “நிரம்பவும் அவசரமான சங்கதி. அதை உங்களிடம் தனியாகச் சொல்ல வேண்டும். ஒரே நிமிஷம் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று பணிவாகக் கூறினார்.

அழகிய மணவாளர், ‘நான் கலியாணச் சடங்கின் மத்தியில் எழுந்து வரமுடியாது. எப்பேர்ப்பட்ட தலை போகிற சங்கதியாக இருந்தாலும், நான் இப்போது இதைவிட்டு வரவும் முடியாது; வேறு எந்தக் காரியத்தையும் கவனிக்கவும் முடியாது. கலியாணம் இன்னம் கால்மணி நேரத்தில் முடிந்து போகும். உடனே நான் வருகிறேன். அது வரையில் தயவு செய்து நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்’ என்றார்.

போலீஸ் கமிஷனர், “நீங்கள் தாலிகட்டுகிற வரையில் நான் பொறுக்கக் கூடுமானால், நான் ஏன் இப்படி அநாகரிகமாய் இங்கே வந்து தாலி கட்டுவதை நிறுத்தச் சொல்லுகிறேன். நான் நேற்று இங்கே வந்திருந்தபோது, எனக்கு எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இப்போதுதான் எனக்குச் சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன. உடனே ஓடிவந்தேன். நான் இந்த விஷயத்தை உங்களிடம் ரகளிலியமாய்ச் சொல்ல வேண்டுமென்று பார்த்தேன். நீங்கள் இந்தக் காரியத்தை நடுவில் நிறுத்தக் கூடாது என்கிறீர்கள். இதை நிறுத்தச் செய்ய வேண்டுமென்பதே என் கருத்து. நீங்கள் வேறொன்றையும் செய்ய வேண்டாம் முதலில் பக்கத்தில் திரும்பி, நீங்கள் புகைப்படத்தில் பார்த்து ஆசைப் பட்ட பெண்ணுக்குத்தான் நீங்கள் தாலிகட்டப் போகிறீர்களா என்பதைத் திருப்தி செய்து கொள்ளுங்கள்” என்றார்.

அதைக்கேட்ட அழகிய மணவாளரின் தந்தையும் தாயும் புஷ்பாவதியைப் பார்த்துவிட்டு, “ஆம், இந்தப் பெண்ணைத்தான் நாங்கள் பார்த்து ஏற்பாடு செய்தது” என்றனர்.