பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 2O3

வித்தியாசம் ஒன்றுமில்லையப்பா இந்தக் கமிஷனருக்கு இப்போது புத்தி சுவாதீனத்தில் இல்லை போலிருக்கிறது. அவர் உளறுவதைக் கேட்டு நீயும் மலைக்கத் தொடங்கிவிட்டாயே” என்றார்.

அதைக்கேட்ட அழகிய மணவாளர் அதற்குமேல் தான் என்ன பேசுவது என்பதை அறியாதவராய்த் தயங்கி நின்றார். தாம் படத்தில் கண்டவளேதான் தமது பக்கத்தில் உட்கார்ந்திருப் பவளோ என்ற சந்தேகத்தை அவர் கொண்டு மெளனமாய் நிற்க லானார். அதற்குள் வேறொரு மோட்டார் வண்டியில் பல ஜனங்கள் இறங்கிப் போலீஸ் கமிஷனர் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்தக் கும்பலில் பல சப் இன்ஸ்பெக்டர்களும் நாலைந்து ஜெவான்களும் இருந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனருக்குப் பக்கத்தில் வந்து நின்றனர். தாம் உளறியதாக சுந்தரமூர்த்தி முதலியார் கூறியதைக் கேட்ட போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி முதலியாரைப் பார்த்து, ‘ஐயா முதலியாரே! நான் உளறுகிறேனா நீர் உளறப் போகிறீரா என்பது இன்னம் கொஞ்ச நேரத்தில் தெரியப் போகிறது” என்றார்.

உடனே சுந்தரமூர்த்தி முதலியார், ‘ஐயா கமிஷனரே! எங்களுடைய குடும்ப விவகாரங்களில் நீர் இப்படி வந்து தலை யிட்டு இப்போது நடக்கும் சுபகாரியத்திற்கு இடையூறு விளைவிக் கிறது சட்டப்படி உம்மீது பெருத்த குற்றமாகிறது. நாங்கள் உம்மை இலேசில் விடமாட்டோம். எங்களுக்கு லக்னம் தவறிப் போய் விடும் போலிருக்கிறது. நீர் மரியாதையாக அப்பால் போய்ச் சேரும். நான் அப்படியேதான் தப்பான புகைப்படத்தைக் காட்டி இந்தக் கலியானத்தை நடத்துகிறேன். நானும் இவரும் சிநேகிதர்கள். எங்களுக்குள் ஆயிரம் விஷயங்கள் இருக்கும். நீர் ஏன் குறுக்கிடுகிறீர்? நான் வேறு புகைப்படத்தைக் காட்டி இருந்தாலும், இவர் இப்போது என் தங்கையையே கட்டிக் கொள்ளப் பிரியப்படுவார். உம்மை யார் கேட்டது?’ என்றார்.

உடனே அழகிய மணவாளருடைய தந்தையும் தாயும் தமது குமாரனை நோக்கி, “என்ன தம்பி இது! இவ்வளவு தூரம் காரியம் நடந்துபோய்விட்டது. ஆயிரக்கணக்கில் வந்திருக்கும் சொந்த ஜனங்களுக்கு எதிரில் இப்படிப்பட்ட தகராறு நடப்பது நமக்கு அவமானமில்லையா. இந்தப் பெண்ணும் அழகாய்த் தான்