பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 209

அப்படியா! இவர் சொல்வதெல்லாம் ஆள்மாறாட்டமாகச் சொல்வதா இந்தப் பெண்ணைக் கேட்டாலே சொல்லுமே! அப்படியே உம்முடைய இஷ்டப் பிரகாரமே செய்கிறேன். அந்த சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்வோம். அம்மா துளஸியம்மா - ஒகோ இல்லை இல்லை - ராஜாம்பாளம்மா! உன்னைத் தானம்மா! நீ ஏன் ஒடி ஒளிகிறாய்! நான் அசங்கியமான கேள்விகளை இத்தனை ஜனங்களுக்கும் முன்னால் கேட்டுவிடப் போகிறேனோவென்று பயப்பட வேண்டாம். எனக்கு மரியாதை தெரியாதா? அந்த மாதிரி கேள்வி கேட்டால் சிறு பெண்கள் லஜ்ஜை படுவார்களென்பது எனக்குத் தெரியாதா வேறொன்றை யும் நான் கேட்கவில்லை. ஒரே ஒரு விஷயம் கேட்கிறேன். அதாவது, உனக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா என்ற விஷயத்தை மாத்திரம் நீ சொல்லிவிட்டால் அதுவே போதும்’ என்றார்.

இராஜாம்பாள், ‘தெரியும்’ என்றாள். போலீஸ் கமிஷனர், “சரி! இதோ நான் காகிதமும் பேனாவும் ஒரு தமிழ்ப் புஸ்தகமும் தருகிறேன். அந்தப் புஸ்தகத்தைப் பார்த்துக் காகிதத்தில் கால் பக்கம் எழுதி என்னிடம் கொடு” என்று கூறியவண்ணம், தமது சட்டைப் பையில் ஆயத்தமாக வைத்திருந்த புஸ்தகம், காகிதம், பென்சில் ஆகிய மூன்றையும் எடுத்து நீட்ட இடையிலிருந்தவர்கள் அவைகளை வாங்கி அந்தப் பெண்ணினிடம் அனுப்பினார்கள்.

போலீஸ் கமிஷனர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்பதன் உள் மர்மத்தை அறியாமல் சுந்தரமூர்த்தி முதலியாரும் மற்ற வர்களும் பிரமித்துப்போய் மெளனமாக உட்கார்ந்திருந்தனர். ஆயினும், போலீஸ் கமிஷனரை எதிர்த்துப் பேச எவருக்கும் துணிபாவது விருப்பமாவது ஏற்படவில்லை. அவர் ஏதோ முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் என்பது பிரத்தியrமாக எல்லோருக்கும் தெரிந்து போனது. ஆகையால், எல்லோரும் அவருக்கு அநுசரணையாகவே மாறிவிட்டனர். -

புஸ்தகம், காகிதம், பென்சில் ஆகிய மூன்றையும் வாங்கிக் கொண்ட இராஜாம்பாள் என்ற பெண் புஸ்தகத்தைப் பார்த்துக் செ.கோ.:V-14