பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 செளந்தர கோகிலம்

காகிதத்தில் அரைப் பக்கம் வரையில் எழுதி, அதைப் பக்கத்திலிருந்தவரிடம் கொடுத்துப் போலீஸ் கமிஷனருக்கு அனுப்பினாள். அதற்கு முன் அவர் தமது சட்டைப் பையிலிருந்து வேறு மூன்று காகிதங்களை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டிருந்தார். பெண் எழுதியனுப்பிய காகிதத்தை வாங்கிய போலீஸ் கமிஷனர் தம்மிடத்திலிருந்த மூன்று கடிதங்களின் எழுத்துக்களையும் அந்தக் காகிதத்தின் எழுத்தோடு ஒத்திட்டுப் பார்த்துத் திருப்தி செய்து கொண்ட பின் நான்கு காகிதங் களையும் அழகிய மணவாளரிடம் அனுப்பி, ‘ஐயா! இந்த நான்கு காகிதங்களிலுள்ள எழுத்துகளும் ஒருவருடைய எழுத்து தானா இல்லையா என்பதை நீங்களும், மற்றவர்களும் பார்த்துச் சொல்லுங்கள்” என்று கூறினார்.

அவைகளை வாங்கி உற்றுப் பார்த்த அழகிய மணவாளரும், மற்றும் பலரும், “நான்கு காகிதங்களின் எழுத்துகளும் ஒருவரால் எழுதப்பட்டவைகள்தான்” என்று சந்தேகமறக் கூறினர்.

உடனே போலீஸ் கமிஷனர், “நீங்கள் மாத்திரம் சொல்வது போதாது. சுந்தரமூர்த்தி முதலியாருக்கும் காட்டுங்கள். ஆனால், அவர் எதையும் படிக்காதபடி, தூரத்தில் வைத்துக் கொண்டே காட்டுங்கள், எழுத்துக்களின் ரூபத்தை மாத்திரம் அவர் பார்த்துச் சொல்லட்டும்’ என்றார்.

உடனே சிலர் அவைகளை சுந்தரமூர்த்தி முதலியாருக்குக் காட்ட, அவர் எழுத்துகளை ஆராய்ச்சி செய்து, ‘நான்கு காகிதங்களும் ஒருவரால் எழுதப்பட்டவை போலவேதான் இருக்கின்றன. ஆனால் அதை நிச்சயமாய்ச் சொல்ல முடியாது” என்றார்.

போலீஸ் கமிஷனர், ‘அது வாஸ்தவந்தான். எல்லாவற்றையும் ஒரே மனிதர் எழுதிய காலத்தில் பார்த்திருந்தால்தான் அதை நிச்சயமாய்ச் சொல்லலாம். அதிருக்கட்டும். இனி இவைகளில் எழுதி இருக்கும் விஷயங்களை நாம் கவனிப்போம்” என்று கூறி அழகிய மணவாளரை நோக்கி, “நீங்கள் இந்த நான்கு கடிதங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு, சிவப்பு நிற உரைக்குள் இருக்கும் கடிதத்தை முன்னிலும், வெள்ளை நிற உறைக்குள் இருக்கும் கடிதத்தை இரண்டாவதாகவும், உரை