பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 செளந்தர கோகிலம்

பெண் நல்ல விவேகி. அவள் தான் வீட்டுக் காரியங்களை யெல்லாம் பார்க்கிறது. அந்தப் பெண் கடற்கரைக்கு வந்திருந்த சமயத்தில், இவர் தம்முடைய மோட்டார் வண்டியை வேண்டுமென்றே கொண்டுபோய் அவர்களுடைய பீடன் வண்டியில் முட்டி, அதையும் பெண்களையும் கீழே கவிழ்த்து விட்டாராம். பிறகு அவர்களுடைய வரலாற்றைத் தெரிந்து கொண்டு அந்த இரண்டு பெண்களையும் தாமே கலியாணம் செய்துகொண்டு. எல்லாச் சொத்துகளையும் அபகரித்துவிட வேண்டுமென்று பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்தார். மூத்த பெண்ணை அவர்கள் வேறொரு ஏழைக் குடும்பத்தில் கட்டிக் கொடுக்க ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த மாப்பிள்ளைப் பையனுடைய பெயர் கண்ணபிரானாம். இவர் புஷ்பாவதியை அனுப்பித் தமக்கே மூத்த பெண்ணைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டு இல்லாத தந்திரமெல்லாம் செய்து பார்த்தார். அவர்கள் சம்மதிக்கவில்லை. இரண்டாவது பெண்ணை இவர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இவர் தங்களுக்கு எதோ அசெளகரியமென்றும், ஒரு மாசகாலம் பொறுத்து கலியாணத்தை நடத்திக் கொள்வதாகவும் சொல்லிவிட்டார். பிறகு அவர்கள் மூத்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடத்தினார்கள். அதற்குள் இவர் என்ன செய்தார் என்றால், போஸ்டாபீஸ் திருட்டில் அகப்பட்ட ரிஜிஸ்டர்டு, இன்ஷியூர்டு கடிதங்களையெல்லாம் நிரம்பவும் சாமர்த்தியமாகப் பிரித்து உள்ளே இருந்த ஏராளமான நோட்டுகள் நகைகள் முதலியவை களை எடுத்துக்கொண்டு, மறுபடி அவைகளை முன்போலவே ஒட்டி ஒரு பெட்டியில் வைத்து, அந்தக் கண்ணபிரானும், அவருடைய தாயாரும் கலியானப் பெண்ணின் பங்களாவிற்குப் போயிருந்த சமயத்தில் இரவில் போய், ஒட்டின் வழியாக வீட்டிற்குள் இறங்கி, பெட்டியை நடு அறையின் தரையில் வைத்துப் புதைத்துவிட்டு உடனே எங்கள் ஜாகைக்கு வந்தார். வேறே யாரைக் கொண்டாவது எழுதச் சொன்னால், இன்னார் எழுதியதென்பது வெளியாகி விடுமென்று, என்னைத் தனியாக வைத்துக் கொண்டு, போலீஸ் கமிஷனருக்கு ஒர் அநாமதேயக் கடிதம் எழுதி அதை வாங்கிக் கொண்டு போய்த் தபாலில் போட்டுவிட்டு வந்துவிட்டார். உடனே போலீசார் அந்த