பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18-ஆவது அதிகாரம் காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது

னி நாம் நமது அருங்குண நண்பர்களான குஞ்சிதபாத முதலியாரையும், திவான் சாமியாரையும் கவனிப்போம். தஞ்சை இ கலெக்டர் தங்கமணி நாடார் விசாரணை %; நடத்தி, அதன் விவரங்களையும், தமது அபிப்பிராயத்தையும், சிபார்சையும் சென்னை

கவர்னருக்கு எழுதியனுப்பியதன்மேல், அவரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகல்களும், திவான் சாமியாரால் தயாரிக்கப்பட்ட விளம்பரமும் இந்தியா முழுதிலுமுள்ள ஒவ்வோர் ஊருக்கும் அனுப்பப்பட்ட விஷயம் முன்னரே கூறப்பட்டதல்லவா! அதன் பிறகு அவர்கள் சுமார் ஒரு மாதகாலம் வரையில் பொறுத்துப் பார்த்தனர். கிழவரது இளைய சம்சாரத்தைப் பற்றிய செய்தி எங்கிருந்தாலும் திடீரென்று வந்து சேருமென்று தந்தையும் புதல்வரும் ஆவல்கொண்டு ஒவ்வொரு நிமிஷமும் தபாலை எதிர்பார்த்துப் பார்த்து ஏமாறிப் போய், அவள் அநேகமாய் இரங்கூன், சிங்கப்பூர் முதலிய அயல் நாடுகளுள் எதற்கேனும் போயிருக்க வேண்டும், அல்லது இந்த தேசத்திலேயே இருந்தால், போலீசாரது கண்ணில் படாமல் பெரிய பட்டணங்களில் எதிலாகிலும்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டனர். ஆயினும் சென்னை துரைத்தனத்தார் வெளியிட்ட உத்தரவு அவள் வரையில் எட்டியிருக்குமோ இராதோ என்பதை மாத்திரம் அவர்கள் சந்தேகமற நிச்சயிக்க மாட்டாதவர்களாய் இருந்தனர். அதன் பிறகு இன்னொரு மாதகாலம் கழிந்தது. திருவடமருதூரில் குஞ்சிதயாத முதலியாரது வீடுகளையும் நிலங்களையும் வாங்கி அனுபவித்து வந்தவர்கள் திருவையாற்றுக்கு வந்து குஞ்சிதபாத முதலியாரைக் கண்டு தங்களுக்குச் சேரவேண்டிய பணத்தொகை