பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 229

சாதாரணமான காரியமாக இருக்கிறது. இந்த சுந்தரமூர்த்தி நம்முடைய பையனை ஏமாற்ற வேண்டுமென்று நினைத்து வேறொரு பெண்ணின் படத்தைக் கொடுத்தது, தெய்வமே அவ்வாறு செய்யும்படி தூண்டியதனால் நடந்த காரியமென்றே நான் நினைக்கிறேன். இந்தப் படத்தில் இருக்கும் பெண்ணுக்கும் உனக்குந்தான் பிராப்தம். இந்த சுந்தரமூர்த்தி உன்னை ஏமாற்றப் பார்க்கிறான். அது பலியாது’ என் கடவுளே முன்னறிகுறி காட்டி யதாக நான் எண்ணுகிறேன். எந்தப் பெண்ணின் வடிவத்தைக் கண்டு பையன் பிரியப்பட்டானோ, அந்தப் பெண்ணையே அவனுக்குக் கட்டி விடுவதென்று நாங்கள் இப்போது தீர்மானித்து விட்டோம். அந்தப் பெண்ணுக்கும் தாயாருக்கும் அந்த விஷயத்தில் மனப் பூர்த்தியான சம்மதமே ராஜரத்ன முதலியார் என்னுடைய ஆப்த சிநேகராயிருந்தவர். அவருடைய குடும்பத்தின் மேம்பாட்டைப் பற்றி நான் இனி விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. அவருடைய இளைய குமாரத்தியை நம்முடைய பையனுக்கே கட்டுவதென்று நாங்கள் தீர்மானித்து விட்டோம். அது மாத்திரமல்ல. அக்காள் இருக்கையில் தங்கைக்கு முன்னால் கலியாணம் செய்வது உசிதமல்ல. கண்ண பிரான் முதலியார் என்பவரும் அவரது தாயாரும் சுத்த நிரபராதி என்பதும் இப்போது பரிஷ்காரமாய் ருஜுவாகி விட்டது. அதுவு மன்றி, மூத்த பெண் அவரைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்ற உறுதியோடு இருப்பதாகவும் தெரிகிறது. ஆகையால், இப்போதே போய்க் கண்ணபிரான் முதலியாரை இங்கே அழைத்து வரத் தீர்மானித்திருக்கிறோம். அவருடைய தாயார் மஞ்சட்குப்பம் கூடலூரில் இருப்பதாகத் தெரிகிறது. அங்கேயும் ஒரு மனிதரை யனுப்பி, அந்த அம்மாளையும் இங்கேயே அழைத்து வருவோம். மூத்த பெண் வண்ணாரப்பேட்டையில் இருக்கிறது. அதையும் அழைத்து வருவோம். இன்றைக்கு மூன்றாவது நாளும் முகூர்த்த நாளாம். அன்று இந்த இரண்டு கலியாணங்களையும் இவ்விடத் திலே லக்ஷணமாக நடத்தி விடுவோம். கலியாணத்திற்காக விஜயம் செய்திருக்கும் பந்து மித்திரர்கள் எல்லோரும் தயவு செய்து இங்கேயே இருந்து அந்தக் கலியாணத்தை நடத்தி வைத்து, தம்பதிகளை ஆசீர்வதித்து எங்களைக் கெளரவப்படுத்த வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன். இவ்வளவு தூரம் இந்த