பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 செளந்தர கோகிலம்

சுபகாரியம் நடந்து இடையில் நின்று போவதென்றால், அது எங்கள் மனசுக்கு நிரம்பவும் அவமரியாதையை உண்டாக் கியதாகத் தோன்றும். ஆகவே, கலியாணங்களை அதிக காலம் ஒத்தி வைக்காமல் நடத்துவது அத்யாவசியம். இதே லக்னத்தில் முடிக்க வேண்டுமென்று நான் எண்ணினேன். ஆனால் பெரிய பெண்ணும், மற்றவர்களும் வரவேண்டும். அதற்கு அவகாச மில்லை. ஆகையால், மூன்றாவது நாள் வரையில் எல்லோரும் எப்படியாவது பெரிய மனசுடன் இருந்து இந்த சுபகாரியத்தை நிறைவேற்றி வைக்க வேண்டுமாய்த் தங்களெல்லோரையும் பன்முறை நமஸ்கரித்து வேண்டிக் கொள்ளுகிறேன்’ என்று நிரம்பவும் பணிவாகவும் விநயமாகவும் கூற ஜனங்கள், ‘தங்களுடைய யோசனை நிரம்பவும் சிலாக்கியமானது. அப்படியே செய்யுங்கள். நாங்கள் அவசியம் இருந்து நடத்தி வைக்கிறோம்” என்றனர். -

அப்பொழுது செளந்தரவல்லி தனது தாயண்டை நெருங்கி, அந்த அம்மாளின் காதில், ‘அம்மா! நானே நேரில் வண்ணாரப் பேட்டைக்குப் போய் அக்காளை அழைத்து வருகிறேன். அவளுடைய விஷயத்தில் நான் நிரம்பவும் அபராதியாகி விட்டேன். அதைப்பற்றி என் மனம் தவித்துப் போகிறது. நான் போய் அக்காளுடைய காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சி, அவளுடைய மனவருத்தத்தை ம்ாற்றி அவளை இங்கேயே அழைத்துக்கொண்டு வருகிறேன். நீங்கள் மஞ்சட் குப்பத்துக்குப் போய் கற்பகவல்லியம்மாளை அழைத்து வாருங்கள். அந்த அம்மாள் விஷயத்திலும் நான் பெருத்த அநியாயம் செய்து விட்டேன். அவர்களைத்தான் எப்படிச் சமாதானப்படுத்துவ தென்பது தெரியவில்லை. இந்த மோசக்காரர்கள் செய்ததை உண்மையென்று நம்பி நான் என் அவசர புத்தியினால், அவர்களைத் தாறுமாறாகப் பேசி விட்டேன். நான் தெரியாத் தனத்தினால் செய்த பிழையை மன்னிக்கும்படி நான் ஆயிரம் தரம் அவர்களுடைய காலில் விழுந்து கேட்டுக் கொண்டதாகச் சொல்லி அழைத்துக்கொண்டு வாருங்கள். அக்காள் புருஷனை வேறே ஆண் பிள்ளை யாராவது அழைத்து வரட்டும்” என்றாள். அந்தச் சமயத்தில் சில ஜெவான்கள் சுந்தரமூர்த்தி முதலி யாருக்கு விலங்கிட்டு, அவ்விடத்திலிருந்து அழைத்துப் போனது