பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20-ஆவது அதிகாரம் அமிர்த கலசம்

ளஸியம்மாள் புதுச்சேரியிலுள்ள தனது தந்தைக்கு எழுதிய கடிதங்கள் சென்னை போலீஸ் கமிஷனருக்கு எப்படி வந்தன வென்பதை, ஆ. நமது வாசகர்களே சுலபத்தில் யூகித்துக் கொண்டிருக்கலாம். ஆயினும், அது சம்பந்த தி மாய் நாம் சில தகவல்களைத் தெரிவித்து மேலே

நடந்த வரலாற்றைக் கூறுவோம். திவான் சாமியாரும், உதவிச் சாமியாரும் துரைக்கண்ணு முதலியாருக்கு ஐயாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள நோட்டுகளை ஒர் உரைக்குள் வைத்து ரிஜிஸ்டர் செய்தனுப்பிய பிறகு மறைவான ஒரிடத்திற்குப் போய்க் கடிதங்கள் இரண்டையும் பிரித்துப் படித்துப் பார்த்தனர். பார்க்கவே, சுந்தரமூர்த்தி முதலியாரது செய்கைகள் அவர்களது மனத்தில் பெருத்த ஆக்கிரோஷத்தையும், வியப்பையும் மனக் கொதிப்பையும் உண்டாக்கிவிட்டன. ஆயினும் புஷ்பாவதி கடைசி வரையில் நிரபராதியாகவே இருக்கிறாளென்ற விஷயம் மாத்திரம் அவர்களுக்கு நிரம்பவும் திருப்திகரமாகவும் சந்தோஷகர மாகவும் இருந்ததன்றி, தாம் அந்த விஷயத்தில் தக்க நடவடிக் கைகள் எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் ஊக்கத் தையும் உண்டாக்கியது. புஷ்பாவதியின் கலியாணம் முடிவதற் குள் தாம் சென்னைப் போய் அதைத் தடுத்து அவளை அழைத்து வந்துவிட வேண்டுமென்றும், துளளியம்மாளை அவ்விடத்தி லிருந்து தப்ப வைத்து அழைத்துவர வேண்டுமென்றும் அவர்கள் தீர்மானித்துக் கொண்டனர். ஆனால், துளவியம்மாளைத் தாம் அழைத்து வந்தால், அவளது தந்தை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆதலால், தாம் அவளை யாரிடம் ஒப்புவிப்பது என்பதைப் பற்றி வெகுநேரம் வரையில் யோசனை செய்து, கடைசியில் அவர்கள் அவ்வூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரிடம் போய் அவரிடம்