பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 233

தங்களது வரலாற்றைத் தெரிவித்து, கடிதங்கள் இரண்டையும் காட்டினர். சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு முதலியாரது பந்துவாதலால், அவர் கடிதங்களைப் படித்துப் பார்த்து, நிரம்பவும் பதறிப்போய்த் துளளியம்மாளது நிலைமையைப் பற்றி மிகவும் வருந்தி, “ஐயா! துரைக்கண்ணு முதலியார் பிடிவாத மாயிருப்பதைக் கருதி அந்தப் பெண்ணின் இடரை நாம் நிவர்த்திக்காமல் இருப்பது நிரம்பவும் கொடுமையான காரியம். ஆகையால், நானே நேரில் உங்களோடு வருகிறேன். அந்தப் பெண்ணை மீட்டு நான் இங்கே அழைத்து வந்து வைத்துக் கொண்டு, ரகசியத்தில் அதன் தகப்பனாருக்குச் செய்தி சொல்லி அனுப்பி, பெண் இனியாவது கெட்ட வழியில் போகாமல் ஒழுங்காயிருப்பதற்குத் தக்க மார்க்கம் செய்கிறேன். பிரெஞ்சு இலாகாவைச் சேர்ந்த பெண்ணை அக்கிரமமாக அவர் கொண்டு போனது சட்டப்படி குற்றமாகிறது. பெண்ணை மீட்டு அழைத்துக் கொண்டுவர எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆகவே, நான் வருகிறேன். நீங்கள் கமலவல்லியைப் பற்றி அனுப்பி வைத்த விளம்பர விஷயம் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. ஆனாலும், இவர்கள் பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டிருந் தமையால், அவர்கள் தான் இவர்களென்று நான் கண்டு கொள்ள இயலாமல் போய்விட்டது. அது விஷயமாய் இப்போதும், நான் நடவடிக்கை எடுத்துக் கொள்வது அவ்வளவு உசிதமாகத் தோன்ற வில்லை. ஆகையால் நீங்கள் உடனே போய்த் திருவடமருதூர் சப் இன்ஸ்பெக்டருக்கு இந்தக் கடிதங்களைக் காட்டி, அவரையும் கூட அழைத்துக் கொள்ள வேண்டும். அதுவுமன்றி, திருவையாற்றி லுள்ள குஞ்சிதயாத முதலியாரையும் அழைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சேர்ந்து வாருங்கள். நான் இங்கே இருந்து புறப் பட்டு வந்து உங்களை விழுப்புரத்தில் சந்திக்கிறேன். நாளைக்கு மறுநாள் காலையில் கலியாணம். ஆகையால், நாம் நாளை தினம் இரவு 8 மணிக்கு எழும்பூர் போய்ச் சேரும் வண்டியில் பட்டணம் போய் விடுவோம். அங்கே போய் மற்ற காரியங் களை யோசித்துக் கொள்வோம்’ என்றார்.

உடனே சாமியார்கள் இருவரும் அதற்கு இசைந்து அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டனர். புறப்பட்டவர்கள் நேராய்த் திருவடமருதூருக்குப் போய், அவ்விடத்துப் போலீஸ்