பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 செளந்தர கோகிலம்

சப் இன்ஸ்பெக்டரைக் கண்டு, அவர் சென்னைக்குத் தங்களோடு வருவதற்கு ஏற்பாடு செய்துகொண்டு, அங்கிருந்து திருவை யாற்றுக்குச் சென்றனர். கிழவருக்கு வேறு எந்தத் தகவலையும் தெரிவிக்க அவர்கள் சிறிதும் விரும்பவில்லை. புஷ்பாவதி சென்னையில் இருப்பதாகவும், அவளுக்கு விளம்பரச் செய்தியே தெரியாதென்றும், அவள் அது வரையில் நன்னெறி தவறாமல் இருக்கும் விஷயத்தையும் தாம் சந்தேகமறத் தெரிந்து கொண்டதாகவும் கிழவரிடம் கூறவேண்டுமென்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டனர்; அதுவுமன்றி, புஷ்பாவதியைத் தமது வசப்படுத்திக் கொள்ள கிழவருக்கே உரிமை இருந்ததன்றி, மற்றவருக்கு இல்லை. ஆதலால், அவரும் தங்களுடன் உடனே புறப்பட்டு சென்னைக்கு வரவேண்டுமென்று அவரிடம் நிரம்பவும் விநயமாகக் கேட்டுக் கொண்டனர். புஷ்பாவதி தனது தேக பரிசுத்தம் கெடாமல் இருக்கும் பட்சத்தில் மாத்திரம் தாம் அவளை ஏற்றுக் கொள்ளலாமென்று கிழவர் எண்ணியிருந்தவர் ஆதலால், அவள் அவ்வாறே களங்கமற்றவளாய் இருக்கிறாள் என்பதைக் கேட்கவே, அவளைத் தாம் ஏற்றுக் கொள்ளலாம் என்று அபிப்பிராயப்பட்டு, அவர்களுடன் வர இணங்கினார்.

உடனே எல்லோரும் புறப்பட்டு ரயிலில் வர, இரண்டு. சப் இன்ஸ்பெக்டர்களும் இடை வழியில் வந்து சேர்ந்து கொண்டனர். அவர்கள் கிழவரிடம் கடிதங்களைப் பற்றிய தகவல் எதையும் தெரிவியாதிருக்கும்படி, திவான் சாமியார் அவர்களிடம் தனிமை யில் கேட்டுக்கொள்ள, அவர்கள் அதற்கிணங்கினர். கலியாண தினத்திற்கு முந்திய நாள் இரவு எட்டு மணிக்கு எல்லோரும் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தனர். அதற்குமேல் தாம் போலீஸ் கமிஷனரிடம் போவது மரியாதையல்லவென்றும், மறுநாள் அதிகாலையில் போகலாமென்றும், அவர்கள் தீர்மானித்துக் கொண்டதன்றி, காலியாயிருந்த ஒரு ஜாகையையும் உடனே வாடகைக்குப் பேசி ஒப்புக்கொண்டு, இரவு அவ்விடத்தில் தங்கி இருந்தனர். விடியற்காலையில் எல்லோரும் எழுந்து தமது காலைக் கடமைகளை முடித்துக் கொண்டபின் குஞ்சிதடாத முதலியாரை மாத்திரம் அவ்விடத்தில் வைத்துவிட்டு நேராய்ப் போலீஸ் கமிஷனரிடம் போய் விஷயங்களையெல்லாம் கூறிக் கடிதங் களையும் காட்டவே, அவர் அளவற்ற ஆச்சரியமும் கோபமும்