பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 235

அடைந்து, தமது உதவிக் கமிஷனரைப் பிடித்து சுந்தரமூர்த்தி முதலியாரது பங்களாவிற்கு அனுப்பிவிட்டு, தாம் மற்றவர் களுடன் அழகிய மணவாளரது பங்களாவிற்கு வந்து சேர, முன் விவரிக்கப்பட்டபடி, எல்லா ரகஸியங்களும் வெளியாயின. முடிவில் சுந்தரமூர்த்தி முதலியாரும் சிறைப்படுத்தப்பட்டார்.

சாமியார்கள் புஷ்பாவதியை அழைத்துப் போவதற்கு ஒரு வண்டி தயாரித்து ஆயத்தமாக வைத்துக் கொண்டிருந்ததன்றி, அவளது உபயோகத்திற்குச் சாதாரணச் சேலை ரவிக்கை முதலியவைகளும் வாங்கி வைத்திருந்தனர். அவள் கலியாணக் கோலத்தோடு போனால், கிழவர் அவளது முகத்திலும் விழிக்கமாட்டாரென்று தெரியும். ஆதலால், அதற்குத் தக்க ஏற்பாட்டுடன் அவர்கள் வந்திருந்தனர். ஆகவே, வண்டியை நடுவழியிலிருந்த சர் சவலை ராமசாமி முதலியாரது சத்திரத்தில் நிறுத்தி அவளை இறக்கி அழைத்துக்கொண்டே போய் உதவிச் சாமியார் அவளைத் தனியாக வைத்துக் கொண்டு, கிழவரிடம் அவள் நடந்துகொள்ள வேண்டிய மாதிரியைச் சொல்லிக் கொடுத்து, அவளது கலியாணக் கோலத்தையும் மாற்றி, அவள் சாதாரணத் தோற்றத்தோடு இருக்கும்படியாகவும் கிழவரிடம் ஒழுங்காகவும், அவர் சம்சயம் கொள்ளாதபடியும் நடந்து கொள்ள வேண்டுமென்றும் உபதேசித்தார். அதன்பிறகு அவர்கள் மறுபடி அவளை வண்டியில் வைத்து அழைத்துக்கொண்டு குஞ்சிதபாத முதலியார் இருந்த ஜாகைக்குப் போய்ச் சேர்ந்தனர். சுமார் இரண்டு வருஷ காலம் எவரும் நாதியின்றிப் பிச்சைக்காரராய்த் திரிந்து கூடியநோய் கொண்டு இறக்கும் தருணத்தில் இருந்த தமக்குச் சகலமான செல்வமும், பழைய கண்ணியமான நிலைமையும் திரும்பினாலும், தமது யெளவன மனைவி திரும்பித் தம்மிடம் வரப்போகிறாளாவென்றும், வந்தாலும் தம்மை அவள் இலட்சியம் செய்ய மாட்டாள் என்றும் நினைத்து முற்றிலும் நம்பிக்கை இழந்து விரக்தி கொண்டிருந்த குஞ்சிதபாத முதலியார் தமது யெளவன மனைவி முன்னிருந் ததைக் காட்டிலும் பன்மடங்கு கனிந்த அழகும் கம்பீரத் தோற்றமும் முகக்களையும் நிறைந்தவளாய்த் தங்கக்கொடிபோல நாணிக் குனிந்து பயந்து பயந்து மருண்ட வண்ணம் உள்ளே வந்து நுழைந்ததைக் காணவே, அவரது மனம் மகா இன்பகரமான