பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 237

உருக்கமும் பொங்கி யெழுந்து அவரது நெஞ்சை படைத்தன. அவர் ஆநந்த பாஷ்பம் சொரிந்து தேம்பித் தேம்பிக் குழந்தை போல அழுது, ‘அப்பா மோகலிங்கம்! உன்னை நான் என்னவென்று புகழப் போகிறேன்! எப்படிக் கிடந்த என்னை நீ மறுபடி எப்பேர்ப்பட்ட நிலைமைக்கு உயர்த்தி விட்டாய்! என்னென்ன வைபவங்களை உண்டாக்கிக் கொடுக்கிறாய்! மனிதராய் செய்யச் சாத்தியப்படாத காரியங்களை யெல்லாம் நீ சாதித்து விட்டாயப்பனே! உன்னை நான் பேசுந்தெய்வமென்று தான் மதிக்கிறேன் என்னப்பனே! எம்பெருமான் உனக்கு நீடித்த ஆயுளையும் குறைவற்ற சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும்” எனறாா.

திவான் சாமியார், “அப்பா! தங்கள் மனம் குளிர்ந்தால், அது ஒன்றே எனக்குப் பெருத்த தைரியத்தையும், அதனால் நீடித்த ஆயுளையும், சந்தோஷத்தையும் கொடுக்குமென்பதைப் பற்றிச் சந்தேகமே இல்லை’ என்றார்.

கிழவர், ‘ஆ என்னப்பனே! என் கண்ணே உன் குணத் தழகை நான் என்னவென்று புகழப் போகிறேன் - ஆம், இந்தப் பெண் மாத்திரம் வந்ததே, இதன் சொந்தக்காரர் யாரும் வர வில்லையா?” என்றார்.

திவான் சாமியார், “வர அவர்களுக்கு முகமில்லை. அவர்கள் வராமலிருப்பதே, தாங்களும் என் தாயும் அதிக மனவொற்றுமை யோடு எப்போதும் சந்தோஷமாயிருப்பதற்கு உகந்ததென்று நாங்களும் நினைத்து, அம்மாளை மாத்திரம் அழைத்து வந்தோம். அம்மாளுக்கும் மற்றவர் வருவது கொஞ்சமும் விருப்பமாக இல்லை” என்றார்.

கிழவர், “சரி, உங்கள் இஷ்டம்’ என்றார். திவான் சாமியார், ‘அப்பா என் தாயார் தங்களைவிட்டுப் பிரிந்து வெகு காலமாகிறது. தங்களுக்குக் கால் கும்பிடவும், தங்களோடு சந்தோஷமாய்ப் பேசவும், அவர்கள் ஆசைப்படு கிறார்கள். ஆகையால், தாங்கள் உள்ளே போய் அம்மாளுடன் பேசுங்கள். நாங்கள் நாமெல்லோருக்கும் வேண்டிய போஜன விஷயத்தைக் கவனிக்கிறோம்’ என்றார்.