பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 செளந்தர கோகிலம்

உதவிச் சாமியார் : ஆம். இனி அவர்களை நிரம்பவும் உயர்வான பதங்களால் அழையுங்கள்.

கிழவர் : நான் அப்படியே செய்யத் தடையில்லை. ஆனால் அவர்கள் மறுபடியும் முன்போல அதற்கு இடம் கொடுக்காமல் வற்புறுத்துவார்களோ என்னவோ? -

உதவிச் சாமியார் : அம். வாஸ்வந்தான். அவர்கள் எப்படித் தான் சொல்வார்கள். நீங்கள் அவர்களுடைய வாயை அடக்க இன்னொரு தந்திரம் செய்யுங்கள். நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள்; சுவாமிகளே! தாங்கள் காஷாயம் அணிந்து ஜடை தரித்திருக்கும் யதிதிகள். நான் கேவலம் குடும்பஸ்தன். நான் வயசில் பெரியவனாயிருந்தாலும், தங்களை ஒருமைப் பதத்தால் அழைக்க முடியவே முடியாது. தாங்கள் ஒரு காரியம் செய்தால், நான் ஒருமைப் பதத்தால் தங்களை அழைக்கிறேன். அதாவது, தாங்கள் தங்களுடைய தீrையை விலக்கி, முகத்தை சுத்தம் செய்துகொண்டு, காஷாயம் உடுத்தாமல், எங்களைப்போல உடுத்திக் கொள்ளும் பட்சத்தில், நான் ஒருமைப் பதத்தால் தங்களைக் கூப்பிடுகிறேன்’ என்று ஒரே பிடிவாதமாய்ச் சொல்லிவிடுங்கள். பிறகு அவர்கள் அந்த விஷயத்தை அதோடு விட்டுவிடுவார்கள். தாங்கள் அவர்களை மரியாதையாகவே கூப்பிடலாம். அவர்கள் தீrை முதலியவைகளை விலக்கி விட்டால், பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

கிழவர் : (மிகுந்த சந்தோஷமடைந்து) ஆம். அது நல்ல யுக்திதான். அப்படியே செய்கிறேன்.

உதவிச் சாமியார் : நான் தங்களைத் தூண்டிவிட்டது அவர் களுக்குத் தெரிந்தால், அவர்களுடைய கெட்ட அபிப்பி ராயத்திற்கு நான் பாத்திரனாவேன்.

கிழவர் : தங்களை நான் காட்டிக் கொடுப்பேனா, அதைப் பற்றித் தாங்கள் கவலைக்கொள்ள வேண்டாம் - என்றார்.

அவ்வாறு அவர்கள் சம்பாஷித்திருக்கையில் திவான் சாமியார் வந்து உள்ளே நுழைந்தார். உடனே உதவிச் சாமியார் தமது இருகைகளையும் கூப்பி, “அடியேன் தங்களுக்குப் பெருத்த தொந்தரவைக் கொடுத்துவிட்டேன். rமித்தருள வேண்டும்” என்றார்.