பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 245

இவர்களை நாம் தற்சமயம் இவ்வளவோடு விடுத்து வேறொரு விஷயத்தைக் கூறுவோம். வண்ணாரப் பேட்டை பங்களாவில் தனியாக இருந்து வந்த நமது பெண்மணியான கோகிலாம்பாள் கண்ணபிரானையே நினைத்து நினைத்து உருகி அல்லும் பகலும் அநவரதமும் அழுத கண்ணும் புண்ணுற்ற மனதுமாக இருந்தாள். அவள் தனது போஜனத்தை நாடவில்லை. நித்திரையையும் நாடவில்லை; தனது தேக போஷணையையே சிறிதும் கவனிக்காமல் அசட்டையாக விட்டு, கண்ணபிரானது குடும்பத்திற்கும், தங்களது குடும்பத்திற்கும் நேரிட்டுள்ள பல இடர்களை நினைத்து நினைத்து சதாசர்வதா துக்கித்து மனமாழ்கிக் கிடந்தாள். செளந்தரவல்லியின் கலியான தினத்தன்று அவளது மனவேதனை உச்சநிலையை அடைந்து, அவள் பொறுக்கத்தக்க வரம்பை மீறி அபாரமாகப் பெருகி விட்டது. தனது கலியாணம் நின்று போனதைப் பற்றிய நினைவே அவளுக்கு உண்டாகவில்லை. தனது தங்கையின் கலியாணம் நடக்கும்போது, தானும் கூட இருந்து அந்த ஆநந்தத்தை அடைய தான் பாக்கியம் செய்யவில்லையே என்றும், தனது தங்கையும் தாயும் ஏகாங்கியாய் இருந்து காரியங்களை நடத்துவது தனது தங்கைக்கு மதிப்புக் குறைவாயிருக்குமே யென்றும் எண்ணிப் பெரு வேதனையிலாழ்ந்து, “ஆகா! எங்களுக்கு என்ன கஷ்ட காலம் வந்துவிட்டது! நாங்கள் பிறந்த வேளைப் பயன் இப்படியா இருக்கவேண்டும் ஐயோ! ஊரில் எத்தனையோ கோடாநுகோடி ஜனங்கள் இருக்கிறார்களே! அவர்களுடைய வீடுகளிலெல்லாம் கலியாணங்கள் இப்படியா நடக்கின்றன. எனக்குக் கலியாணம் செய்ய ஆரம்பித்து அந்த மாதிரி முடிந்தது. அதுதான் போனால் போகிறதென்றால், நான் சாதாரணமாக இருந்து இந்தக் கலியாணத்தை நடத்தி, அங்கிருந்து மற்றவர்களைப்போல நானும் சந்தோஷமடையக் கூடாதா அதற்குக்கூட கொடுத்து வைக்காத மகாபாவி ஜென்ம மெடுத்தேனே இப்போது காலை பத்து மணியிருக்கும். இந்நேரம் செளந்தராவுக்குக் கலியாணம் முடிந்து போயிருக்கும். அவளும், அவளுடைய புருஷரும் கலியாணக் கோலத்தோடு இருப்பது போல, என் அகக் கண்ணில் ஒருதோற்றம் உண்டாகிறதே! ஐயோ! அவர்கள் இருவரும் எவ்வளவு அழகாயிருப்பார்கள்! நான் அவளுக்குத் தெரியாமல்