பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 செளந்தர கோகிலம்

யாரோ ஒரு பரதேசியைப் போலவாவது கும்பலில் துர நின்றபடி பார்த்துவிட்டு வந்தவிடலாமாவென்றுகூட நினைக்கும் படி இருக்கிறதே! ஈசா என்னை இப்படியும் சோதனைக்கு ஆளாக்க வேண்டுமா மற்ற விஷயத்தில் என்னை வதைத்தாலும், என் தங்கைக்கு என்மேல் இவ்வளவு பகைமையும், அருவருப்பும் ஏற்படவேண்டுமா! நான் அவள் விஷயத்தில் என் மனசாலும் யாதொரு தீங்கும் நினையாதிருக்கையில், அவள் இப்படி மாறுவது கால வித்தியாசத்தின் பலனா! ஆ! தெய்வமே! இப்படியும் சதி செய்யலாமா யாதொரு காரணமுமின்றி கூடப் பிறந்த தங்கைகளுக்குள் இப்படிப்பட்ட பகைமையை உண்டாக்கி விட்டாயோ! ஐயோ! இனி என்னுடைய ஆயிசு காலம் முழுதுமே அவளும் நானும் இப்படியேதான் இருந்துவிட நேருமோ என்னவோ தெரியவில்லையே. அவளை நான் மறுபடி பார்ப்பேனா ஐயோ! என் மனம் பதறுகிறதே! தெய்வமே! தெய்வமே! என் விஷயத்தில் உன் ஹிருதயம் இவ்வளவு கடினமாய்ப் போகவேண்டுமா என்று நினைத்து நினைத்து அழுதழுது சோர்ந்து தளர்ந்து கண்ணிரை மாலை மாலையாய்ப் பெருகவிட்ட வண்ணம் ஒர் அறையின் தரையில் அலங்கோல மாய் விழுந்து கிடந்தாள். அவளது ஆடையும் அளகபாரமும் தாறுமாறாகச் சிதறிப்போய்க் கிடந்தன. கைகால்களெல்லாம் சுவாதீனமற்று அப்படியப்படியே ஒய்ந்து கிடந்தன. அவ்வாறு அவள் சகிக்கவொண்ணாத துயரமும், ஏக்கமும், மனத்தளர்ச்சி யும், ஏமாற்றமும் அடைந்து ஒய்ந்து படுத்திருக்க, அப்பொழுது அந்த அறையின் கதவு சடேரென்று திறந்து கொண்டது. ‘அக்கா! அக்கா!’ என்று மிகுந்த வாஞ்சையோடும், பயபக்தியோடும், உருக்கமாகவும், பதைபதைப்பாகவும் அழைத்துக்கொண்டு செளந்தரவல்லி தனது கலியாணக் கோலத்தோடு உள்ளே நுழைந்தாள். நுழைந்தவள் தனது அக்காள் மகா பரிதாபகரமாகப் படுத்திருந்த அலங்கோல நிலைமையைக் கண்டு திடுக்கிட்டுப் பதறித் துடிதுடித்துப்போய், ‘ஆ அக்கா என்ன கோலம் இது: மகா துஷ்டையாகிய என்னால் அல்லவா நீ இப்படிப்பட்ட கோலத்தை அடைய நேர்ந்தது! என் அக்கா என் அமிர்தம் போன்ற அக்கா என் அரிய மாணிக்கக்கட்டி போன்ற அக்கா! உன் அலங்கோலத்தைப் பார்க்க என் வயிறு பற்றி எரிகிறதே!