பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 23

என்றைய தினம் அந்த ராஜாபகதூரிடம் ஒப்புவிக்கிறேனோ, அன்றுதான் எனக்கு மோr தினம். அது கிடைத்துவிட்டால், மறுமையில் எனக்கு மோகrம் கிடைப்பது நிச்சயத்திலும் நிச்சயம். எப்படியாவது நீ முயற்சி எடுத்து இதை நிறைவேற்ற வேண்டும் அப்பனே. நீ என்னைவிட வயதில் சிறியவனாய் இருக்கிறாய். இல்லாவிட்டால், நான் என் இரு கைகளையும் குவித்து நிரம்பவும் பணிவாக உன்னிடம் கேட்டுக் கொண் டிருப்பேன். ஆனால் உலகைத் துறந்த சாமியாராயிருந்தால், அவர் வயசில் சிறியவராயிருந்தாலும், அவரை விருத்தர்கள்கூட வணங்கலாம். ஆனாலும், நான் உன்னை வணங்குவதை நீ பல தடவைகளில் ஆட்சேபித்திருக்கிறாய். ஆகையால், நான் உன்னை நினைத்து உன்னுடைய மூதாதைகளுக்கு ஆயிரங்கோடி நமஸ்காரம் செய்கிறேன். என்னப்பனே மோகலிங்கம்! நான் உனக்கு அடிக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் பிரயாசை அனந்தம். ஆனாலும், இந்த ஒரு பிரயாசையை நான் கொடுத்தே திர வேண்டியிருக்கிறது” என்று நிரம்பவும் உருக்கமாகவும், தாழ்மையாகவும், நயமாகவும், வாஞ்சையாகவும் கூறி வேண்டிக் கொண்டார்.

தமது மனையாட்டியான காந்திமதியம்மாளையும் புதல்வன் ராஜாபகதூரையும் காண வேண்டுமென்று கிழவர் ஏக்கங்கொண்டு வருந்திக் கூறிய மொழிகளைக் கேட்க, திவான் சாமியாரது மனதும் கண்களும் கலங்கிப் போயின. தாம் எத்தனையோ ஊர் களுக்குப் போய் அலைந்து பார்த்தும், எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க இயலாமல், அவர்கள் இனி அகப்பட மாட்டார்கள் என்று தீர்மானித்து, விரக்தியடைந்திருப்பதை திவான் சாமியார் குஞ்சிதபாத முதலியாரிடம் வெளியிட விரும்பவில்லை. கமலவல்லி இரங்கூன் முதலிய அயல்நாடுகளில் இருந்தால், அவளைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்ற காரியமென்றும், அவள் ஒருகால் பெரிய பட்டணம் எதிலாகிலும் இருந்தால், தாம் ஒவ்வொரு பட்டன மாகச் சென்று தம்மாலேன்ற வரையில் முயற்சி செய்து, ஒவ்வொரு பெரிய பட்டணத்திலும் உள்ள ஒவ்வொரு தெரு விற்கும் போய் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மனிதர்களிடத் திலும் பேசி கமலவல்லியைக் கண்டுபிடிப்பதில் தமது ஆயுளையே