பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 செளந்தர கோகிலம்

பட்டுப் பட்டுத்தான் தேற வேண்டுமென்று நீ சொன்ன வார்த்தையைத் தங்கத் தகட்டில் செதுக்கி வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். அது என் விஷயத்தில் முற்றிலும் பொருத்தமாக முடிந்தது. உன்னை இளக்காரம் செய்து துஷித்து உதறித் தள்ளி விலக்கிவைத்துவிட்டு நான் போய்க் கலியாணம் செய்துகொண்டு வாழ நினைத்தேனல்லவா என் எண்ணத்தில் கடவுள் நன்றாக மண்ணைப் போட்டுக் குத்திவிட்டார். நான் இன்று அடைந்த அவமானத்துக்கு அளவு சொல்ல முடியாது” என்றாள்.

அதைக்கேட்ட கோகிலாம்பாள் தனது செவிகளையே நம்பாமல் அளவற்ற வியப்பும், பிரமிப்பும், மனவெழுச்சியும், பூரிப்பும் அடைந்து, ஆனந்த பாஷ்பம் சொரிந்து, தான் அவள்மீது சிறிதும் பகைமை பாராட்டாமல் முன்னிருந்ததை விட அதிக வாஞ்சையோடிருந்தது தெரியுமாறு அவளை அன்போடு அனைத்து, ‘என்ன சொந்தரா இது! நீ சொல்வது எனக்கு விளங்கவில்லையே! என்ன நடந்ததம்மா? உன் கழுத்தில் மாங்கலியம் இல்லையே! கலியாணம் ஏனம்மா நடக்கவில்லை? என்ன இடையூறு நேர்ந்ததம்மா? நம்முடைய அம்மாள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?’ என்று மிகுந்த ஆவலோடு வினவினாள். உடனே செளந்தரவல்லி எல்லா விஷயங்களையும் விவரமாக எடுத்துக் கூறினாள். மைலாப்பூராரது அபாரமான செல்வம் செல்வாக்கு முதலியவற்றின் பெருமையையும், அவர்கள் செய்திருந்த அத்யாச்சரியகரமான கலியான ஏற்பாடுகளையும், அழகிய மணவாளரின் கட்டழகு, குணாதிசயங்கள், உத்தியோகச் சிறப்பு ஆகிய விவரங்களையும், கலியாணம் நடந்த சமயத்தில் போலீஸ் கமிஷனர் திடீரென்று தோன்றி, அதை நிறுத்தியதையும், மேலே முடிவு வரையில் நிகழ்ந்த சம்பவங்களையும், கண்ணபிரான் விடுதலையடைந்ததையும், மறுபடி செய்யப்பட்டி ருக்கும் கலியாணத் தீர்மானத்தையும், கற்பகவல்லியம்மாளைப் பற்றி சமாச்சாரப் பத்திரிகையில் வந்த செய்தி, பூஞ்சோலையம் மாள் கூடலூருக்குப் போயிருப்பது, கண்ணபிரானை அழைத்து வந்து தமது பங்களாவில் வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத் துடன் அழகிய மணவாள முதலியாரே நேரில் சப் ஜெயிலுக்குப் போயிருப்பது ஆகிய செய்திகள் யாவற்றையும் சவிஸ்தாரமாக எடுத்துக் கூறினாள். அவைகளைக் கேட்ட கோகிலாம்பாள், “ஆ