பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 253

முடிவாக பூஞ்சோலையம்மாள் கற்பகவல்லியம்மாளை நோக்கி, ‘அம்மா இன்னொரு முக்கியமான வேண்டுகோள் இருக்கிறது. என்னுடைய இளைய பெண் செளந்தரவல்லியின் அவசர புத்திதான் உங்களுக்குத் தெரிந்ததாயிற்றே. அவள் உங்கள் பேரில் ஏற்பட்ட அவதூறை உண்மையென்றே நம்பி அது விஷயமாய் உங்களிடம் தகாதபடி சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டதாகவும், அதை நீங்கள் மனசில் வைக்காமல் மறந்துவிட வேண்டுமென்று உங்களிடம் தான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாய்த் தெரிவிக்கவும் சொன்னாள். அந்த மாதிரி ஏதோ சம்பவம் நடந்ததென்பது எனக்கு அவள் சொன்ன பிறகுதான் தெரிந்தது. எங்களைக் கருதி நீங்கள் அதைப் பாராட்டக்கூடாது. இது என்னுடைய முக்கியமான வேண்டுகோள்” என்றாள்.

உடனே கற்பகவல்லியம்மாள், “அது உலக அநுபவமில்லாத குழந்தை. மற்றவர் சொன்னதை நிஜமென்று அது நம்பியது. அதன்மேல் தப்பிதமே இல்லை. நான் அதைப்பற்றி நினைக்கவே இல்லை. அது விஷயத்தில் உங்களுக்கும் அந்தக் குழந்தைக்கும் கவலையே வேண்டியதில்லை” என்றாள்.

உடனே அவர்கள் இருவரும் அவ்விடத்தை விட்டுப் புறப் பட்டு சென்னைக்குப் போவதைப்புற்றிய பிரஸ்தாபம் ஏற்பட்டது. அன்றைய இரவு வண்டியிலேயே புறப்பட்டு வரவேண்டுமென்று பூஞ்சோலையம்மாள் பிரரேபித்தாள் நல்ல செய்தி கிடைத்த வுடன் அவ்வளவு அவசரமாய் அந்த உபகாரிகளின் வீட்டை விட்டு வந்துவிடுவது கற்பகவல்லியம்மாளுக்கு அநுசிதமாகத் தோன்றியது. ஆகவே, மறுநாள் புறப்பட்டுப் போகலாமென்று கற்பகவல்லியம்மாள் கூற, அதைக் கேட்ட டிப்டி கலெக்டருடைய தாயார், “நீங்கள் கலியாணத்தை முன்னிட்டுப் போகிறீர்கள். சனிக்கிழமை போவது நல்லதல்ல. ஆகையால் நீங்கள் இருவரும் நாளைய தினம் முழுதும் இங்கே இருந்து, ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுப் போக வேண்டும். நாங்கள் வருந்தியழைத்தாலும், நீங்கள் இருவரும் இங்கே வரக்கூடியவர்களல்ல. நீங்கள் நாளைய தினம் இங்கே இருந்து, அதனால் நாங்கள் சந்தோஷமடையும்படி செய்து, மறுநாள்தான் போகவேண்டும்” என்றாள்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள், ‘தங்களுடைய பிரியப்படியே நாங்கள் செய்யத் தடையில்லை. ஆனால் இந்தக்