பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 செளந்தர கோகிலம்

குடும்பத்தார் எல்லோரும் கூடப் புறப்பட்டு வந்திருந்து, எங்கள் குழந்தைகளின் கலியாணத்தை நடத்தி வைத்துவிட்டு வர வேண்டுமாய்க் கோருகிறேன். அந்த வேண்டுகோளைத் தாங்களும் மற்றவர்களும் அவசியம் பூர்த்தி செய்துதான் தீரவேண்டும்” என்றாள்.

அவர்கள் அவ்வாறே வருவதாக ஒப்புக் கொண்டனர்.


கலியாண் தினமாகிய திங்கள் கிழமை வந்து சேர்ந்தது. அழகிய மணவாள முதலியாரது பங்களாவில் வெள்ளிக்கிழமை முகூர்த்தத்திற்குச் செய்யப்பட்ட அலங்காரங்களும் ஏற்பாடுகளும் அப்படியே இருந்ததன்றி, முன்னிலும் பன்மடங்கு சிறப்பிக்கப் பட்டிருந்தன. அன்றைய தினம் வந்திருந்த ஆயிரக் கணக்கான சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் அந்த மூன்று தினங்களிலும் நித்திய கலியாணம் போல வேளைக்கு வேளை விருந்துகளும் மரியாதைகளும் நடந்தேறி வந்தன. நாகசுரக்காரர்களும், பாண்டு வாத்தியக்காரர்களும், தாசிகளும், சங்கீத வித்வான்களும் தமது திறமையைப் பூர்த்தியாகக் காட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென்று நினைத்து அளவு கடந்த உற்சாகமடைந்து பேய் கொண்டவர்கள் போல ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டு சங்கீதமென்னும் சமுத்திரத்தையே அவ்விடத்தில் வரவழைத்துக் கடைந்து அமிர்தத்தை எடுத்துக் காட்டிவிட்டனர். பெருத்த ஒரு மண்டலேசுவரனது அரண்மனையில் தொடர்ச்சியாக மாதக் கணக்கில் கொண்டாடப்படும் பெருத்த கலியானங்களைப் போலவே அவ்விடத்திலும் அந்தக் கலியான மகோத்சவம் நடந்து கொண்டே இருந்தது.

அழகிய மணவாளரது தந்தை சிறிதும் சலிப்பின்றி, மேன் மேலும் அதிகரித்த ஊக்கமும், குதூகலமும், ஆநந்தமும் கொண்டு லக்ஷக் கணக்கில் பொருளை வாரி இறைத்து ஒர் அற்பக் குறைவுக்கும் இடம் கொடாமல் எல்லா ஏற்பாடுகளையும் அலங் காரங்களையும் செய்து, முன் காலத்தில் தருமபுத்திரர், இராமர் முதலிய மகா மகா மன்னர்கள் ராஜசூய யாகம், அசுவமேத யாகம், பட்டாபிஷேகம் முதலிய சுபகாரியங்களை நடத்தியது இவ்வாறுதான் இருந்ததோவென்று எல்லோரும் அபாரமாகப்