பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 255

புகழும்படி அந்தச் சுபகாரியத்தை ஒப்புயர்வில்லா விதமாக நடத்தி வைத்தார்; வெள்ளிக் கிழமையன்று கலியான மண்டபத்தில் கூடியிருந்தது போலவே, ஆயிரக் கணக்கில் சீமான்களும், சீமாட்டிகளும் உத்தியோகஸ்தர்களும், போலீசாரும் திரண்டு ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். ஒரு பக்கத்தில் நமது உதவிச் சாமியாரும் திவான் சாமியாரும் அவரது தந்தையும் உட்கார்ந் திருந்தனர்; அவர்கள் இருவரும் கலியாணத்திற்கு வரும்போது உதவிச்சாமியார் குஞ்சிதயாத முதலியாரை வேடிக்கையாகக் கலியாணம் பார்த்து வரலாமென்று அழைக்க, அவரும்பொழுது போக்காக வந்து, மற்றவருக்குப் பக்கத்தில் வீற்றிருந்தார். வாத்தி யங்கள் மனதைக் கவரும் வண்ணம் அற்புத முழக்கம் செய் கின்றன. இரண்டு முத்துப் பந்தல்களின் கீழ் முறையே கண்ண பிரானும், அழகிய மணவாளரும் ஜெகஜ் ஜோதியான அலங்காரத் துடன் இராஜ்ய பட்டாபிஷேகம் செய்து கொள்ளும் இரண்டு ராஜகுமாரர்களைப் போல, மகா அற்புதமான அழகும், அலங்காரமும் உடையவர்களாய் வீற்றிருந்தனர். முன்போலவே புரோகிதர்கள் கும்பல்கூடி வேத மந்திரங்களை கானம் செய்து துரிதத்தில் வைதிக காரியங்களை நடத்திக் கொண்டிருந்தனர். முன்போலவே ஆயிரக்கணக்கான சீமாட்டிகள் தத்ரூபம் நட்சத்திரச் சுடர்கள் போன்றவையும் கோடி சூரியப் பிரகாச மானவையுமான ஆடையாபரணங்கள் நிறைந்தவராய் நின்று மங்களகீதம் பாடியவண்ணம் இரண்டு முத்துப் பந்தல்களில் நடுப்பாகத்தை அடைத்துக் கொண்டு நின்றனர். பூஞ்சோலை யம்மாள், கற்பகவல்லியம்மாள், அழகிய மணவாளரின் தாயார் ஆகிய மூவரும் ஒன்றாக ஸ்திரீகளின் கும்பலில் நடுநாயகமாய் நின்றனர். கற்பகவல்லியம்மாள் தனது பொற்கொடி போன்ற தேகத்தில் சுத்த வெண்மையான ஒரு நார்மடிப் புடவையை மாத்திரம் அணிந்து கொண்டு, விதவையான தான் எவர் கண்ணிலும் படுவது கூடாதென நினைத்து, மற்ற ஸ்திரீகளுக்குப் பக்கத்தில் மறைந்து நின்றனள். மணப்பிள்ளைகள் முடிக்க வேண்டிய பூர்வாங்கச் சடங்குகள் முடிய, புரோகிதர்கள் மணப் பெண்களை அழைத்தனர். இருவரும் ஒரே மாதிரியாக இருந்த நமது இளந்தோகைகளான கோகிலாம்பாளும், செளந்தரவல்லியும் பாதாதிகேசம் வரையில் ஆபரணங்களே மயமாகவும், ஜரிகையே