பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 செளந்தர கோகிலம்

நிறைவாகவும், விளங்கி ஒரே காலத்தில் இரட்டைப் பூரணச் சந்திரர்கள் உதயமாவது போலத் தோன்றிப் பல தோழிகளால் நடத்தப்பட்டு, நாணித் தலைகுனிந்து அன்னநடை நடந்து வந்து தத்தம் மணவாளருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டனர். அற்பமும் வித்தியாசமின்றி இருவரும் ஒரே அச்சில் கடைந் தெடுக்கப்பட்ட தங்கப் பதுமைகள் போல் இருந்ததைக் கண்ட விருந்தினரும், மற்றவரும் அப்படியே பிரமித்து மூக்கின்மேல் விரலை வைத்து, “ஆகா! என்ன அழகு என்ன அழகு எவ்வளவு லொகுஸ்ான முகம் ஐயோ! முகத்தைப் பார்த்தால், எத்தனையோ ஜென்மங்களில் பிடித்த பீடையெல்லாம் தொலைந்து போகு மப்பா ரவிவர்மா சரஸ்வதி, லகதிமிப்படங்கள் எழுதியிருக்கி றாரே! இவர்கள் இருவரையும் பார்த்த பிறகு அவருடைய படங்கள் அவ்வளவு அழகாகப் படவில்லை” என்று பலவாறு பேசத் தலைப்பட்டனர். சிலர் “மாப்பிள்ளைகளின் ஸொகுலைப் பார். இருவரும் தமக்குத் தாமே நிகரென்று சொல்லத் தக்கபடியல்லவா இருக்கிறார்கள். இரண்டு பிள்ளைகளும், இரண்டு பெண்களுக்கும் சரியான ஜோடிகள் தான்” என்றனர். இன்னம் சிலர், ஆனாலும் இரண்டு மாப்பிள்ளைகளையும் சமப்படுத்திப் பேசுவது யானையையும் பூனையையும் ஒத்திட்டுப் பேசுவதுபோல இருக்கிறது. அழகிய மணவாளரது செல்வமென்ன செல்வாக்கென்ன உத்தியோகமென்ன! புத்திசாலித்தனமென்ன! குணமென்ன! அந்தப் பையன் அழகிலும் அலங்காரத்திலும் இவரைப்போல இருந்தால் மாத்திரம் மற்ற விஷயங்களில் இவருக்கு ஈடாகிவிடுவானா! அவனுடைய தாய் விதவை. அவன், தாய் ஆகிய இரண்டே பேரைத் தவிர, அவனுக்கு வேறு மனிதரே இல்லை. அவனுக்கு ஏதோ ஒரு கச்சேரியில் பதினைந்து அல்லது இருபது ரூபாயில் குமாஸ்தா வேலை. அவன் இவருக்குச் சமதையாக அலங்காரம் செய்து கொண்டுவந்து உட்கார்ந் திருப்பது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டது போலிருக்கிறது” என்றனர். மற்றும் சிலர், “இந்த ஏழைக் கலியாணத்தையும் இதோடு சேர்த்துச் செய்வதே தவறு. அழகிய மணவாளருக்கு யோசனை இல்லை. அவர் பெண்ணைப் பார்த்து மோகித்துவிட்டார். உடனே அந்த பிரமை பெண்ணைச் சேர்ந்த மற்றவர்கள் பேரிலும் ஏற்பட்டது. சரி, அந்தக் கலியாணத்தையும்