பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 செளந்தர கோகிலம்

செலவழித்து அப்படியாயினும் அவளைக் கிழவரிடம் சேர்த்து வைக்க வேண்டுமென்று தமக்குள் தீர்மானித்திருந்தார். ஆதலால், அவ்வாறு தாம் கமலவல்லியைத் தேடிக்கொண்டு போகையில், காந்திமதியம்மாளையும் ராஜாபகதூரையும் மறுபடி தேடிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் திவான் சாமியார் கிழவரை நோக்கி நிரம்பவும் பணிவாகவும் பயபக்தி விநயத்தோடும் பேசத் தொடங்கி, “அப்பா உங்களுக்கு எது பிரியமோ அதை நான் அவசியம் செய்கிறேன். உங்கள் குமாரரும் நானும் ஒன்றாக இருந்தவர்களல்லவா. அவருடைய பிரதிநிதியாக நான் இப்போது உங்களுடைய திருப்பணி விடைகளைச் செய்து வருகிறேன். இனி என் ஆயிசு காலம் முடிய இதே நிலைமையில் இருந்து உங்களுடைய ஆசை எதுவோ அதைப் பூர்த்தி செய்வதே என்னு டைய தவமாக நான் செய்வேன் என்பதை நீங்கள் உறுதியாக வைத்துக் கொள்ளலாம். நான் ஒன்றன்பின்னொன்றாகப் பெரிய பட்டணங்களில் போய் இருந்து அவர்களைத் தேடிப் பார்க்க லாமென்று எனக்குள் முடிவு செய்திருக்கிறேன். நான் வெளியில் போனாலும், அடிக்கடி திரும்பிவந்து உங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். முதலில் தஞ்சாவூரை எடுத்துக் கொண்டு அந்த ஊரில் ஆராய்ச்சி செய்து பார்க்கப் போகிறேன். பிறகு கும்பகோணம், பிறகு மாயவரம், இப்படி ஒன்றன் பின் ஒன்றாகப் பெரிய பட்டணங்களில் எல்லாம் ஆராய்ந்து பார்த்து விடுகிறேன். வேலைக்காரர்கள் எல்லோரும் யோக்கிய மானவர்கள். அவர்கள் உங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வார்கள். நான் நாளைய தினமே புறப்பட்டுப் போகலா மென்று நினைக்கிறேன். அதற்கு நீங்கள் உத்திரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

கிழவர் ‘அப்படியே செய்யப்பனே! ஆனால் ஒரே தொடர்ச்சியாய்ப் பல நாட்கள் வெளியில் இருந்துவிடாதே. அடிக்கடி உன் முகத்தையாவது நான் பார்க்கும்படிச் செய்து கொண்டிரு” என்றார்.

உடனே திவான் சாமியார் அப்பொழுதே எதையோ நினைத்துக் கொண்டவர் போலக் கிழவரை நோக்கி, “அப்பா! இன்னொரு விஷயம் உங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள