பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 259

உடனே அழகிய மணவாளர், “சரி, சங்கதியைச் சொல்லும், நீர் பீடிகை போட்ட போதே எனக்கு பயமாய்ப் போய்விட்டது. கெடுதல் ஒன்றுமில்லாவிட்டால் சங்கதியைச் சொல்லலாம்” எனறாா.

உதவிச் சாமியார் அழகிய மணவாளரை நோக்கித் தமது கைகளைக் குவித்து நிரம்பவும் விநயமாகப் பேசத் தொடங்கி, ‘ஐயா செல்வச் சீமானே, இப்பேர்ப்பட்ட மகா அருமையான சந்தர்ப்பத்தில், யாராவது கெடுதல் செய்ய நினைப்பார்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் நன்மையை உத்தேசித்தே பேசுகிறேன். தங்களுக்கு ஷட்டகராய் வரப்போகிறவர் தங்க ளுடைய யோக்கியதைக்கு நிரம்பவும் குறைவான நிலைமையில் இருப்பவர் என்ற களங்கம் தங்களுக்கு ஏற்படக்கூடாதென்ற காரணத்தை முன்னிட்டே நான் இப்போது நடுவில் குறுக் கிட்டுப் பேசுகிறேன். இல்லாவிட்டால், நான் இந்தக் கலியாணம் முடிகிற வரையில் பொறுத்திருந்து பிறகு ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்பேன். அந்தக் கலியானப் பந்தலின் கீழ் இருக்கிற மாப்பிள்ளையை நானும், என்னோடு இதோ இருக்கும் கனவான்களும் இப்போதுதான் கவனித்துப் பார்த்தோம். சில வருஷங்களுக்கு முன்பு, இதே சுந்தரமூர்த்தியின் தகப்பனார் முதலிய சில சதிகாரர்களின் சூழ்ச்சியினாலும், காலவித்தியாசத்தினாலும், நாங்கள் இரண்டு மாணிக்கக் கட்டிகளை இழந்து தேடித் தேடி அலைந்து ஏமாறித் தவித்திருந்து வருகிறோம். மாணிக்கக் கட்டிகளென்றால், சகலமான அம்சங்களிலும் சிரேஷ்டமான மனிதர்கள். அந்த மாணிக்கக் கட்டிகள் இரண்டும் இப்படி உருமாறி வந்திருக்கின்றனவென்று நாங்கள் சந்தேகிக் கிறோம். இவர்கள் அவர்களாக இருக்கும் பட்சத்தில், தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் களங்கமும் மாறிப்போகும். மூத்த பெண்ணுக்குக் கிடைத்த இடம் எளியது என்ற ஏச்சும் அந்தப் பெண்ணுக்கு இல்லாமல் போகும்; இவருடைய அன்னையார் விதவை என்ற அமங்கலச் சொல்லும் இல்லாமல் போகும். இத்தனை நன்மைகளையும் உத்தேசித்தே நான் இவ்வளவு சிலாக்கியமான மகாசபையின் மத்தியில் துணிந்து குறுக்கிட்டுப் பேச எழுந்தேன். விஷயத்தைத் தெரிவிக்கலாம் என்றால், தெரிவிக்கிறேன். இல்லாவிட்டால் உட்கார்ந்து கொள்ளுகிறேன்

என்றார்.