பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 செளந்தர கோகிலம்

அருங்குணப் புதல்வர் என்பதையும் உணரவே, அவரது நிலைமை கட்டிலடங்காததாகிவிட்டது. அவர் யாரைப் பார்க்கிறது, யாரைக் கூப்பிடுகிறது, யாரைப் பார்த்து சந்தோஷப்படுவது, எங்கே போவது, என்ன செய்வது என்பதை அறியாமல் பைத்தியம் பிடித்தவர்போல மாறித் தமது இரண்டு கைகளையும் ஆவலோடு விரித்துக்கொண்டு, “ஆகா! இன்று தான் சுபதினம்! நான் இழந்திருந்த மூன்று மாணிக்கக் குன்றுகளையும் ஒருங்கே காண்கிறேன்! சிவபெருமானுடைய பேரருள் இன்றுதான் என் பக்கம் வீசத் தொடங்குகிறது. இன்றுதான் என் உள்ளம் உண்மையில் குளிர்கிறது” என்று கதறிய வண்ணம் மற்ற மூவரையும் நோக்கி ஒரே பாய்ச்சலாகப் பாய்கிறார்.

ஆயிரக்கணக்கான ஜனங்கள் அவ்விடத்தில் கூடித் தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் உணர வில்லை. காந்திமதியம்மாள் ஒடோடியும் சென்று, ‘என் பிராணபதி என் அருங்குணக் குன்றமே! என் உயிருக்குயிரே! என் தெய்வமே தங்களையும் நான் இந்த ஜென்மத்தில் இனி காண்பேனா என்றல்லவா ஏங்கிக் கிடந்தேன்! ஆகா! ஈசா ஈசா! என்ன சந்தோஷத்தைக் கொடுக்கிறாயப்பனே!” என்று கதறிய வண்ணம் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து திவான் முதலியாரைப் பிடித்துக் கொள்ளுகிறாள். ராஜாபகதூரும் அதே காலத்தில் ஒடிவந்து, “அப்பா அப்பா! உங்களை எத்தனை வருஷம் தேடித் தேடி இந்த உலகம் முழுதும் நானும் அம்மாளும் அலைந்து, இனி காணப் போகிறோமா என்று நினைத்து உருகியோடிக் கொண்டிருந்தோமப்பா இப்போதாவது தங்கள் தரிசனம் எங்களுக்குக் கிடைக்கும்படி கடவுளின் திருவருள் ஏற்பட்டதே!” என்று கூறி அலறியபடி தனது தந்தையின் இன்னொரு பக்கத்தைப் பிடித்து ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறான். அதுபோலவே குஞ்சிதபாத முதலியாரும், ‘அப்பனே! என் செல்வச்சீராளா! என் நவநிதியே! என் பாக்கியமே! என் கண்மணி! அமிர்தலிங்கம்! அப்பா! அப்பா என் தங்கமே! என் அருங்குணமணியே! என் பாக்கியமே! என் தவக்கொழுந்தே! நீயா பரதேசிக் கோலங்கொண்டு என்னோடுகூட இருந்து இது

வரையில் என்னைக் காப்பாற்றினாய்! ஆகா! உன் அடையாளமே