பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 263

தெரியாமல் அடியோடு மாறிப்போய் இருக்கிறதே! எப்படி இருந்த நீ இப்படி உருவழிந்து மாறிப்போயிருக்கிறாயே! கண்மணி என்ன கோலமப்பா இது!’ என்று கூறி நமது திவானை அணையப் பார்க்கிறார். காந்திமதியம்மாளின் ஆலிங்கனத் திற்கும், ராஜாபகதூரின் ஆலிங்கனத்திற்குமே திவானினது உடம்பு போதவில்லை. ஆகையால் கிழவர் துார நின்றபடி அவரது கன்னங்களையும், முதுகையும் வாஞ்சையோடு தடவிக் கொடுக்கிறார். திவான் முதலியார் தம் மனத்தில் கரையுடைந்த ஆற்று வெள்ளம்போலப் பொங்கி எழுந்த ஆனந்த வேகத்தைத் தாங்கமாட்டாமல் கண்ணிர் சொரிந்து குழந்தைபோலக் கோவெனக் கதறியழுகிறார். வாயைத் திறந்து வார்த்தை சொல்லலாமென்றால், தொண்டை அடைகிறது. அவர்கள் நால்வரும் அவ்வாறு கூடிய காட்சி கல்லும் கரைந்து உருகத்தக்க தாய் இருந்தது. திவானைப் போலவே மற்ற மூவரும் ஆநந்த பாஷ்பத்தை ஆறு போலச் சொரிந்து தேம்பித் தேம்பி அழுகிறார்கள். எவரும் வாய்விட்டுப் பேசுவதற்கே இயலாதபடி சந்தோஷம் பொங்கிப் பொங்கி வழிகிறது.

‘மருங்கிலா மங்கையும் வகையில் ஐயனும்

ஒருங்கிய இரண்டுடற்கு உயிரொன்றாயினார் கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசலும் வேண்டுமோ.”

- என்று நமது கவிச்சக்ரவர்த்தி கூறியுள்ள வர்ணனை அந்தச் சந்தர்ப்பத்திற்கு முற்றிலும் பொருத்தமாக இருந்தது.

அவ்வாறு அவர்கள் நால்வரும் ஒன்றுகூடி ஆனந்தக் கடலில் ஆழ்ந்திருந்ததைக் காண, பூஞ்சோலையம்மாள், கோகிலாம்பாள் செளந்தரவல்லியம்மாள் ஆகிய மூவரும் தத்தம் இடத்தைவிட்டு எழுந்து ஒடி அவர்களுக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டு தாமும் சந்தோஷப் பெருக்கைத் தாங்கமாட்டாதவராய் ஆநந்தக் கண்ணிரை அபாரமாகச் சொரிந்து அப்படியே ஸ்தம்பித்து நிற்கின்றனர். அழகிய மணவாளரும் மற்றும் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தோரும் அவர்களது பூர்வீகமான வரலாற்றை அறியாதவராய்ப் பிரமித்து அதிசய வசத்தராய் வைத்த கண் வைத்தபடி நின்றனர்.