பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 செளந்தர கோகிலம்

மகாலக்ஷ்மி வந்து தங்கி இருந்தது. ஆகா! என்ன என் பாக்கியம்! இப்பேர்ப்பட்ட மகா உபகாரியின் பத்தினியாரின் பாதம் என் குடிசையில் படவும், நாங்கள் எல்லோரும் தங்கள் குழந்தையின் கலியாணத்திற்கு வரவும், நானும் என் குடும்பத்தாரும் என்ன தவம் செய்தோமோ என்று நிரம்பவும் தழுதழுத்த குரலில் கூறி ஆநந்தக் கண்ணிர் சொரிந்து, மாறி மாறி திவான் முதலியாரையும் காந்திமதியம்மாளையும் நமஸ்கரித்தார். அதைக் கண்ட திவானும், மற்ற எல்லோரும், முக்கியமாய்க் காந்திமதியம்மாளும் பிரமித்துப் போய் சிறிது நேரம் ஒயாது நின்றுவிட்டனர். உடனே திவான் முதலியார் நிரம்பவும் பணிவாகவும் மரியாதையாகவும் டிப்டி கலெக்டரை நோக்கி, ‘ஐயா, தாங்கள் யார் என்பது தெரியவில்லையே! நான் தங்களுக்கு என்ன உதவி செய்தேன் என்பதும் நினைவிற்கு வரவில்லையே!” என்றார்.

உடனே டிப்டி கலெக்டர், “மகாப் பிரபு நான் யாரென்பது நினைவிற்கு வரவில்லையா! நான் திருவடமருதூரிலுள்ள ஒர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் பெயர் அண்ணாசாமி, பீ.ஏ. பரீட்சையில் தேறி வேலையில்லாமல் திண்டாடி தென்னாற்காடு ஜில்லா கலெக்டர் ரெவினியு இன்ஸ்பெக்டர் உத்தியோகம் காலியாயிருப்பதாய் விளம்பரம் வெளியிட்டதைக் கண்டு, நான் சிறுபிள்ளைத் தனத்தினால், தங்களுடைய கையெழுத்தைப் போல பொய்க் கையெழுத்துச் செய்து, நற்சாகழிப் பத்திரம் தயாரித்து கலெக்டருக்கு அனுப்ப, அவர் தங்கள் சிநேகிதராகையால் என் விண்ணப்பத்தைத் தங்களுக்கு அனுப் பினார். தாங்கள் என்னை ஜெயிலுக்கு அனுப்பாமல் என் மேல் கிருபை பாலித்து, எனக்கு சப் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் கொடுக்கும்படி தாங்கள் சிபாரிசு செய்தது நினைவில்லையா! அதுவுமன்றி நாங்கள் நேராக எனக்கு எழுதி அதில் எனக்குப் புத்திமதிகள் சொல்லி இருந்தீர்களல்லவா. அதைக் கண்ட முதல் நான் நல்ல பதவிக்கு வந்துவிட்டேன். என் உழைப்பினாலும் நற்குண நல்லொழுக்கத்தினாலும் நான் இரண்டு வருஷத்தில் தாசில் வேலைக்கு வந்து இப்போது அதே ஊரில் டிப்டி கலெக்டராய் உயர்த்தப் பட்டிருக்கிறேன். மகாப் பிரபுவே! இப்போது ஞாபகம் உண்டாகிறதா?’ என்றார். அதைக் கேட்ட திவான் தமது மனைவி மக்களைக் கண்டதனால் அடைந்த