பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 25

வேண்டுமென்று நான் பல தினங்களாய் எண்ணியிருந்தேன். சந்தர்ப்பம் சரிப்படவில்லை. அதாவது, உங்கள் இளைய சம்சாரத்தின் தகப்பனாருடைய பெயர் இராமலிங்க முதலியா ரல்லவா. அவர் உங்களிடம் தவசிப் பிள்ளையாக அமர்ந்த போதாவது, அதற்குப் பிறகாவது, அவருடைய சொந்த ஊர் எதுவென்பதை அவர் சொன்னதுண்டா? சொல்வி இருந்தால், அந்தப் பெயரை ஞாபகப்படுத்தி எனக்குச் சொல்லுங்கள். நான் போகும்போது, அந்த ஊரிலும் போய் விசாரித்துப் பார்க்கிறேன்” என்றார். -

அதைக்கேட்ட கிழவர், ‘அப்பா மோகலிங்கம்! அந்த இராமலிங்கம் என்னிடம் வேலையில் அமர்ந்தபோது தன்னு டைய சொந்த ஊர் பாபநாசத்துக்குக் கிழக்கில் ஒரு மைல் தூரத்தில் இருப்பதாகவும், தனக்கு அங்கே சொற்ப நிலம்கூட இருப்பதாகவும், அதற்கு என்னவோ பெயர் என்றும் சொன்னான். அந்தப் பெயர் நினைவிற்கு வரவில்லை” என்றார்.

அதைக்கேட்ட திவானினது முகம் சந்தோஷத்தினால் ஜ்வலித்தது. கமலவல்லியின் இருப்பிடத்தை அப்பொழுதே கண்டுவிட்டதுபோல, அவரது மனத்தில் ஒருவித நம்பிக்கையும் துணிபும் உண்டாயின. அவர் கிழவரை நோக்கி, “ஆகா! நான் இந்தத் தகவலை முன்னமேயே உங்களிடம் கேட்காமல், திருவட மருதூரில் போய்ப் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒருவரும் இந்தத் தகவலைச் சொல்லவே இல்லை. நான் இப்போது அந்த ஊருக்குப் போய் ஒரு நிமிஷத்தில் துப்பு விசாரித்து உங்கள் சம்சாரத்தின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுகிறேன். நாளைய தினம் வரையில் நான் இங்கே என்ன செய்யப் போகிறேன். ஒன்றுமில்லை. இப்போதே புறப்பட்டுப் போகிறேன்” என்று கூறிக் கிழவரிடம் அநுமதி பெற்றுக்கொண்டு, உடனே திருவையாற்றை விட்டுப் புறப்பட்டுச் செல்லலானார். அவசரமாக ஏதேனும் ஊருக்குப் போகவேண்டிய சந்தர்ப்பங்களில் மாத்திரம் திவான் சாமியார் குதிரை வண்டி, ரயில் வண்டி முதலிய போக்குவரத்து வசதிகளை உபயோகப்படுத்திக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார். மற்ற சமயங் களில் அவர் கால் நடையாகவே பிரயாணம் செய்து வந்தார்.