பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 273

ஆகையால், நான் இதுவரையில் விதவைக் கோலம் பூண்டிருந் தேன். அவர்கள் வந்து சேர்ந்தபின் உங்களுக்கு எழுதலாம் என்றிருந்தேன். ஏனென்றால், அநாவசியமாக எங்கள் கவலை களையெல்லாம் உங்களுக்கும் உண்டாக்க எனக்கு இஷ்ட மில்லை. கடைசியில் நாங்கள் எதிர்பாராதிருக்கையில், எங்கள் தெய்வமும், செல்வமும் திரும்பின. நானே உங்களுக்கு எழுதலாமென்றிருந்தேன். அதற்குள் உங்களுக்கு யாரோ தந்தி கொடுத்திருக்கிறார்கள்’ என்றாள்.

உடனே திவான் முதலியார், மேலப்பண்ணை முதலியாரைப் பார்த்து, ‘உங்களுக்கு தந்தி வந்ததா?”

அவர் “ஆம், உங்களுக்கு உதவியாக யாரோ ஒரு சாமியார் இருக்கிறாராமே. அவர்தான் கையெழுத்துச் செய்திருந்தார்’ என்றார்.

அதைக்கேட்ட திவர்ன் சாமியார், “என்ன ஆச்சரியம் இது! நமக்குத் தெரியாமலே சுவாமிகள் மகாராஜாவுக்கும் டெலிபோனில் செய்தியனுப்பி இருக்கிறார்கள்; இவர்கள் எல்லோருக்கும் தந்தியனுப்பி இருக்கிறார்கள். இது மாத்திரமா. வேறு எத்தனையோ பெருத்த பெருத்த உதவிகளையெல்லாம் அவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சி இல்லாவிடில், நான் என் சிறிய தாயாரையும், உங்களையும் கண்டுபிடித்திருக்கவே முடியாது. அவர்கள் இன்று காலை முதல் எங்கேயோ போய்விட்டார்களே! நானும் தேடித் தேடிப் பார்க்கிறேன்; சாமியார் ஐயா காணப்படவில்லையே!” என்று கூறி நாற்புறங்களிலும் இருந்த ஜனக் கும்பலில் உதவிச் சாமியார் இருக்கிறாரோவென்று பார்த்தார். எங்கும் அவர் காணப்பட வில்லை.

அப்பொழுது அவர்களுக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த ஒரு மனிதர் காந்திமதியம்மாளுக்கும் திவானுக் கும் முன்னால் விழுந்து சாஷ்டாங்கமாகப் பன்முறை நமஸ்காரம் செய்து எழுந்து கைகட்டி வாய் புதைத்து நின்று, “என் தாயே! என் தந்தையே! உதவிச் சாமியார் வந்த வேலை ஆய்விட்டது. அவர் இன்று காலையோடு மறைந்துபோய் விட்டார். இனி தாங்கள் அந்தப் பைத்தியக்கார வேஷத்தைக் செ.கோ.:V-18