பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 செளந்தர கோகிலம்

காணமுடியாது. நான்தான் அந்த வேஷத்தில் இருந்தவன். எஜமானே! நான் யார் என்பது தெரியவில்லையா? நான்தான் தங்கள் சுயம்பாகியான முத்துசாமி” என்றான்.

அதைக்கேட்ட திவான், காந்திமதியம்மாள், ராஜாபகதூர், கந்தசாமி முதலியார், வீரம்மாள் முதலிய சகலமான ஜனங்களும் திடுக்கிட்டு வியப்பும் பிரமிப்பும் அடைந்து அவனை ஏற இறங்கப் பன்முறை உற்றுப் பார்த்தனர்.

உடனே திவான், “ஆகா முத்துசாமீ! உன்னுடைய அடையாளம் கொஞ்சமும் தெரியாமல் போய்விட்டதப்பனே! நீயா வந்திருந்து இத்தனை பேருதவிகளையும் செய்து எங்கள் எல்லோரையும் சேர்த்து வைத்தாய்!” என்றார்.

முத்துசாமி, “என் தெய்வமே தங்கள் குடும்பம் இம்மாதிரி கலைவதற்கு நானும் காரணஸ்தன் அல்லவா. தாங்கள் புலியினால் அடிபட்டு இறந்து போனதாய்க் கேட்டவுடன், அம்மாள் எப்படி சந்தேகம் கொண்டார்களோ, அதுபோல நானும் சந்தேகம் கொண்டு, தாங்கள் இறந்திருக்க மாட்டீர்கள் என்றும், அம்மாளுடைய கற்பைச் சோதிப்பதற்காகவே தாங்கள் இப்படி சூழ்ச்சி செய்திருக்கிறீர்களென்றும் நினைத்து உடனே திருவடமருதுாருக்கு வந்து பார்த்தேன். அம்மாளும் குழந்தையும் காணாமல் போய்விட்டதாகக் கேள்வியுற்று நான் விசனக் கடலில் ஆழ்ந்ததன்றி, உலகத்தில் விரக்தியடைந்து சந்நியாசிக் கோலம் பூண்டு, என் ஆயிசு காலம் முடியத் தங்கள் மூவரையும் தேடிப் பிடித்து ஒன்றாய்ச் சேர்க்கிறதென்று சங்கல்பம் செய்து கொண்டதன்றி, தங்களுக்கு விஷம் கொடுக்கச் சொன்ன மனிதனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டேன். பிறகு, இராமலிங்கம் தன் பெண்ணைப் பெரியவருக்குக் கட்டிக்கொடுத்ததிலிருந்து எனக்கு அவன் மேல் சந்தேகம் உதித்தது. நான் அவனைக் கவனித்து, அவனிடம் வரத்துப் போக்காயிருந்தவர்களைப் பார்த்ததில், என்னிடம் பணமும் விஷமும் கொடுத்தவன் வந்தான். அவன்தான் அந்தக் குருடியின் தமயன். அவனிடம் நான் தந்திரமாகப் பழகி அவர் களுடைய சதியாலோசனை முழுதையும் தெரிந்து கொண்டேன். பெரியவருக்குத் தெரியாமல் பெட்டியிலிருந்து தவசிப்பிள்ளை