பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 275

ஐயாயிரம் ரூபாயை எடுத்துத் தன் மைத்துனனிடம் கொடுத்து என்னிடம் அனுப்பியதாகவும் நான் கேள்வியுற்றேன். பிறகு நான் பல இடங்களில் அலைந்து தற்செயலாய்த் திருச்செந்தூருக் குப் போக, அங்கிருந்த சத்திரத்திற்கு வந்த வீரம்மாளின் அடையாளத்தை நான் கண்டு பேசியதில், அம்மாளைப் பற்றிய தகவல் கிடைத்தது. நான் பல ஊர்களுக்குப் போவதாகவும், மாயாவிபூதிப் பரதேசி என்பவரைக் கண்டால் திருச்செந்தூருக்கு அழைத்து வருவதாகவும் அவளிடம் சொன்ன பின் அவ்விடத்தை விட்டு வந்து அம்மாளையும் தங்களையும் தேடிக் கடைசியாகத் திருவையாற்றில் பெரியவர் இருப்பதாய் விளம்பரத்தின் மூலம் தெரிந்து கொண்டு, அவருடைய வீட்டில் தாங்கள், இருக்கக்கண்டு தாங்கள்தான் என் எஜமானர் என்று சந்தேகித்தேன். கடைசியில் கந்தசாமி முதலியாருடைய குழந்தையின் கழுத்துச் சங்கிலி விஷயமாய் நடந்த விசாரணையைக் கவனிக்க வந்தேன். அவ்விடத்தில் என் சந்தேகம் நிவர்த்தியாயிற்று. அப்போதுதான் கந்தசாமி முதலியார் அந்த ஊரில் இருக்கிறார் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். அதன்பிறகு நடந்தவைகள் தங்களுக்குத் தெரியும். நான் இன்னானென்பது தெரிந்தால், தாங்கள் என்னை கிட்டச் சேர்க்கமாட்டீர்களென்று நினைத்து, நான் பலவித தகவல்களைச் சொல்லித் தங்களுடன் இருந்தேன். தங்களைக் கண்டபோதே எனக்கு எல்லாத் தகவல்களும் தெரியும். ஆனாலும், நான் வெளியிடக் கூடவில்லை. ஏனென்றால், நான் இன்னான் என்பதையும் வெளியிட நேரும்: அதுவுமன்றி, அம்மாள் நிரபராதி என்று நான் சொன்னால், அது அவ்வளவாக நம்பிக்கைப் படாது. ஆகையால், வீரம்மாளே தற்செயலாய்த் தங்களுக்கு அதைச் சொல்லும்படி செய்தேன். மதுரையில் ஒரு நெல் வர்த்தகர் சொன்னதாக நானே பொய் சொல்லித் தங்களை வேண்டுமென்றே திருச்செந்தூருக்கு அழைத்துப் போனேன். நான் எந்த ஊருக்குப் போனாலும், விதவைத் தாயும், பிள்ளையுமான இருவர் அந்த ஊரில் இருக்கிறார்களா என்று விசாரிப்பதையே முக்கிய வேலையாகச் செய்து வந்தேன். அன்றைய தினம் இங்கே போலீஸ் கமிஷனர் வந்து நடவடிக்கை நடத்தினார்களல்லவா, அப்போது எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. இந்தக் கண்ணபிரான்தான்