பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 செளந்தர கோகிலம்

ஒருவேளை நம்முடைய ராஜாபகதூராய் இருக்கலாமோ என்று நான் சந்தேகித்து, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களைப் பார்க்கப் போகிறேனென்று தங்களிடம் சொல்லிவிட்டு, ஜெயிலுக்குப் போய்ப் பையனைப் பார்த்தேன். பையன் அவன் போலவே இருந்தான். ஆனாலும் தாயாரையும் பார்த்துத்தான் நிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் தங்கள் தந்தையைத் தூண்டித் தங்களுடைய பரதேசிக் கோலத்தைப் போக்க யுக்தி செய்தேன்; கிழவரைக் கூடவே அழைத்து வந்தால், எல்லோரையும் ஒரே காலத்தில் பார்ப்பதான ஆநந்தத்தை அவர்களும் அடையட்டும் என்ற எண்ணத்தோடு அவர்களையும் தந்திரமாக இங்கே அழைத்து வந்தேன். அம்மாளை இந்தக் கும்பலில்தான் நான் பார்க்க முடிந்தது. உடனே என் சந்தேகம் நிச்சயப்பட்டது. உங்கள் மூவரையும் தனிமையில் சந்திக்க வைப்பதைவிட எல்லோருக்கும் எதிரில் சந்திக்க வைப்பதே ஜனங்களுக்குச் சந்தேகமில்லாமல் திருப்திகரமாய்ப் போகுமென்று நினைத்து நான் இவ்விடத்திலேயே எல்லோரையும் சேர்த்து வைத்தேன். பிறகு அன்றைய தினமே இவர்களெல்லோருக்கும் தந்தி அனுப்பினேன், திருவனந்தபுரம் மகாராஜாவுக்கும் தந்தியெழுதிக் கொடுத்தேன். தந்தி குமாஸ்தா, அந்த ராஜா இங்கேயே வந்தி ருப்பதாகச் சொன்னார். உடனே, அவர்களுக்கு டெலிபோன் மூலம் செய்தி அனுப்பினேன். அவர்கள் வந்து தங்களுடைய திவான் பதவியை மறுபடியும் கொடுத்து விட்டார்கள். இவ்வளவோடு என் வேலை பூர்த்தியாகிறது. என்னால் தாங்கள் இழந்த பதவியும் திரும்பியது. பந்து ஜனங்களும் வந்து சேர்ந்தனர். நான் செய்ய நினைத்த கொடிய பாதகத்திற்கு என்னாலேன்ற வரையில் நான் பிராயச்சித்தம் செய்துகொண்டு பரிகாரமும் தேடிவிட்டேன். இனி நான் நிச்சலனமாய் இரவில் துரங்குவேன். என் ஜென்மமும் இனி கடைத்தேறும்’ என்றான்.

அவன் கூறிய வரலாற்றைக் கேட்ட திவான் முதலியாரும் காந்திமதியம்மாளும் மற்றவர்களும் தாங்க வொண்ணாத ஆச்சரியமும், ஆநந்தமும் கொண்டு பிரமித்துப் போயினர்.

உடனே திவான் முதலியார் முத்துசாமியை நோக்கி, “அப்பா முத்துசாமி! இப்பேர்ப்பட்ட மகா அற்புதமான குணம்