பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்த கலசம் 277

உன்னிடம் இருக்குமென்றும், நீ எங்களைப் பற்றி இவ்விதமான முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டிருப்பாய் என்றும் நான் கனவில்கூட நினைக்கவில்லை. என்னப்பனே முத்துசாமி! உன் உடம்புகூட அடியோடு உருக்குலைந்து போய்விட்டதே ஆகா! அரச மரத்தைப் பிடித்த சதியன் அதன் கீழிருந்த பிள்ளையாரை யும் பிடித்ததென்று பழமொழி சொல்வார்கள். அதுபோல எங்களுக்கு நேரிட்ட காலவித்தியாசம் உன்னையும் அநியாயமாக ஒறுத்து விட்டதப்பா முத்துசாமி! உன்னைப் பார்க்கப் பார்க்க, என் மனம் அபாரமான சந்தோஷத்தினால் பொங்குகிறது! உன்னை ஒரு குழந்தை மாதிரி கட்டித் தூக்கி ஆலிங்கனம் செய்து முத்தமிட வேண்டுமென்ற ஒரு பதைப்பும் உண்டாகிறது. அப்படி நான் செய்தால், இங்கேயுள்ள மற்றவர்கள் என்னைப் பைத்தியக்காரனென்று மதிப்பார்கள். ஆகையால் நான் அப்படிச் செய்யாமல் என் மனசை அடக்கிக் கொள்ளுகிறேன். என்னப்பனே முத்துசாமி! நீ மகா சிரேஷ்ட மான குணமுடையவனப்பா ஆதியில் புத்தி கொஞ்சம் சபலித்ததால், ஒரு தவறு செய்துவிட்டாலும், பிறகு தவறென்று மனப்பூர்வமாக உணர்ந்து, அதைப்பற்றி வருந்தித் திருந்தி அதற்குத் தக்க பரிகாரங்களையும் தேடுவதென்றால், அது சாமான்யமாய் எல்லோரும் செய்யக்கூடிய காரியமல்ல. எல்லா மனிதரும் இவ்விதமான மனப்பான்மை உடையவராயிருந்தால், இந்த உலகமே வெகு சீக்கிரத்தில் சுவர்க்கலோகத்துக்குச் சமானமாகி விடும். அன்பனே! நீ நீடுழி சந்தோஷமாக வாழ எம்பெருமானுடைய திருவருள் பூர்த்தியாக ஏற்படட்டும்’ என்று கூறி ஆநந்தக் கண்ணிர் சொரிந்தார்.


கலியாணம் வெகுவெகு சம்பிரமமாக நடந்து பூர்த்தி அடைந்தது. பிரிந்து கூடியவர்களான காந்திமதியம்மாளும், திவான் முதலியாரும் அதன் பிறகு அடைந்த ஆநந்தத்தையும் சுகத்தையும், நாம் என்னவென்று எடுத்துக் கூறப் போகிறோம். சகலமான உத்தம குணங்களும் அவர்களிருவரிடமும் சம்பூர்ண மாக நிறைந்திருந்தமையால், அவர்களது குணவொழுக்கங்களைக் காண்போர் அனைவரும் “மனிதர் இருந்தால் இப்படியல்லவா