பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 27

கொண்டு, தாம் எப்படியும் வெகு சீக்கிரத்தில் தமது சிற்றன் னையைக் கண்டுபிடித்து அழைத்து வந்து தமது தந்தையிடம் சேர்த்துவிடலாம் என்று நினைத்து பலமான மானசீகக் கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டார். ஆயினும் அவரது மனத்தில் இன்னொரு சந்தேகமும் தோன்றியது. அவ்வளவு குறிப்பான செய்தி அந்த ஊராருக்குத் தெரிந்திருக்க, அவர்கள் சென்னை துரைத்தனத்தாரது உத்தரவு கிடைத்தவுடன் அந்த முக்கியமான தகவலை கிராம முன்சீப்பு ஏன் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க வில்லையென்று திவான் விசாரித்தார். வாய்ப் பேச்சாகக் கேள்விப்பட்ட அந்தச் செய்தியைத் தாம் மேலதிகாரிகளுக்கு எழுதினால், அது சம்பந்தமான விசாரணைக்குத் தாம் மேல் அதிகாரியின் கச்சேரிக்கும், இன்னும் மதுரை முதலிய துார தேசங் களுக்கும் போக நேருமென்ற பயத்தினால், கிராம முன்சீப்பு அதை வெளியிடாமல் இருந்துவிட்டார் என்பதையும் திவான் தெரிந்து கொண்டார்.

திவான் அன்றைய தினம் மாலையிலேயே அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுப் பாபநாசத்திற்கு வந்து ரயிலேறினார். தாம் அங்கிருந்து நேராக மதுரைக்குப் போக வேண்டுமென்ற ஆவல் எழுந்து அவரைத் தூண்டியது. ஆனாலும், அவ்விடத்தில் ஒருகால் தாம் பல தினங்கள் வரையில் இருக்க நேரிடின் தாம் வராததைக் குறித்துத் தமது தந்தையிடம் தெரிவித்துவிட்டு மதுரைக்குப் போவதே உசிதமான காரியமென்று தீர்மானித்துக்கொண்டு அன்றைய தினம் இரவு பதினோரு மணிக்குத் தஞ்சைக்குப் போய்ச் சேர்ந்தார். அவ்விடத்திலிருந்து திருவையாறு வடக்குத் திக்கில் ஆறு மைல் தூரத்தில் இருக்கிறதென்ற விஷயம் முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது. இரவு பதினொறு மணிக்குமேல் அவ்விடத்திலிருந்து திருவையாற்றுக்குப் போகக்கூடிய குதிரை வண்டி அன்றைய தினம் கிடைக்காமல் போய்விட்டது. ஆகையால், அவர் அன்றிரவு தஞ்சை ரயில் ஸ்டேஷனிலேயே படுத்திருக்க நேர்ந்தது. அதுவுமன்றி, தாம் அப்பொழுதே திருவையாற்றிற்குப் போனாலும், தாம் அங்கே போய்ச் சேரும்பொழுதே நன்றாய் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் தமது தந்தைக்கு நித்திரா பங்கம் ஏற்படுவதோடு, அவர் தமது