பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 செளந்தர கோகிலம்

இளைய தாரத்தைப் பற்றிய அநுகூலமான செய்தியைக் கேட்டால், அதைப் பற்றியும் கவலையும், ஆவலும் கொள்வார் என்றும், அதனால், அவருக்கு இரவெல்லாம் தூக்கமில்லாமல் போய்விடு மென்றும் திவான் சாமியார் நினைத்தார். ஆகையால் அதைக் கருதியும் தாம் அந்த இரவைத் தஞ்சையிலேயே கழித்துவிட்டு விடியற்காலையில் எழுந்துபோக வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு அவர் அவ்விடத்திலேயே படுத்திருந்தார். அவ்விடத்தில் எப்பொழுதும் வந்து போய்க் கொண்டிருந்த ஏராளமான ஜனங்கள் சளசளவென்று ஓயாமல் பேசிக் கூச்சலிட்டு அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்தமையாலும், எங்கு பார்த்தாலும் நிறைந் திருந்த வாழைப்பழத்தோல்கள், வெற்றிலை பாக்குத் தாம்பூலம் முதலியவற்றை நாடிப் பட்டாளம் பட்டாளமாய் வரும் கொசுக் களின் கடியைத் தாங்கமாட்டாமலும், திவான் சாமியார் தூக்கம் பிடியாதவராய்ப் புரண்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்து தமது சிற்றன்னையைக் கண்டுபிடித்து அழைத்துவந்து தமது தந்தை யிடம் சேர்த்து வைக்கப் போகிறோம் என்ற ஆவலும், துடிப்பும் அவரது மனத்தில் எப்போதும் நிறைந்திருந்து அவரைத் தூங்க விடாமல் அடித்தமையாலும், அவர் விடியற்காலம் நான்கு மணி வரையில் தூங்காமலேயே அவ்விடத்தில் படுத்திருந்தார். அதற்குமேல் அவருக்கு அவ்விடத்தில் இருக்கை கொள்ள வில்லை. தாம் அவ்விடத்தில் இருந்து வதைப்பட்டு வருந்திக் கிடப்பதைவிட, நடந்து சென்று கொண்டேயிருந்தால் பொழுது விடியும் சமயத்தில் தாம் திருவையாற்றுக்குப் போய்ச் சேர்ந்து விடலாமென்று நினைத்தவராய், அவர் உடனே சரேலென்று எழுந்து அவ்விடத்தைவிட்டு வடக்குத் திக்கில் சென்ற ரஸ்தாவின் வழியாக நடக்கத் தொடங்கினார். முறையே தஞ்சைப்பட்டணம், வடவாறு, கருத்தட்டான்குடி, வெண்ணாற்றங்கரை, அம்மன் பேட்டை, வெட்டாறு முதலியவற்றைக் கடந்து, நமது திவான் சாமியார் கண்டியூர் என்ற ஸ்தலத்தையடைந்த சமயத்தில், பொழுது நன்றாக விடிந்து போக, சூரியனும் கீழ்த்திசையில் கிளம்பிவிட்டான். கண்டியூர் என்பது பாடல் பெற்ற சிறந்த புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்று. அந்த ஊருக்குள்ளாகவே ரஸ்தா செல்லுகின்றது. சிவன் கோவிலும், விஷ்ணு கோவிலும் ரஸ்தாவின் ஒரத்திலேயே இருக்கின்றன. ஊரையடுத்தாற்போல