பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 29

ஒர் ஆறு வெகு ரமணியமாகச் செல்கின்றது. அந்த ஊரைச் சுற்றி நாற்புறங்களிலும் தென்னஞ்சோலைகளும், கரும்புத் தோட்டங் களும், வெற்றிலைக் கொடிக்கால்களும், நற்பயிர்களுமே நிறைந்து ஒரே பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் காணப்படும். தஞ்சைப் பட்டணத்தின் காய்கறி மார்க்கெட்டில் பிரதி தினமும் மலை மலையாக வந்து குவியும் வெற்றிலைக் கட்டுகள், வாழை இலைக் கட்டுகள், தேங்காய் மூட்டைகள், காய்கறிகள், கருப்பங் கழிக் கட்டுகள் முதலியவை யாவும், கண்டியூர் முதலிய கிராமங்களிலிருந்தே உற்பத்தியாய் அங்கு போய்ச் சேருகின்றன. ஆதலால், அதற்குத் தக்கபடி கண்டியூர் நீர்வளம் நிலவளம் முதலிய சிறப்புகள் சம்பூர்ணமாய் அமையப் பெற்றிருந்தது. அவ்வூரிலிருந்த குடிமக்களும் ஆரோக்கியமான தேகமும், கத்தமான பழக்க வழக்கங்களும் உடையவர்களாய் இருந்ததன்றி, தெய்வ பக்தியில் சிறந்தவர்களாயும் இருந்தனர். அவர்கள் அந்த ஊரிலிருந்த சிவாலயம் விஷ்ணுவாலயங்களில் அடிக்கடி மாறி மாறி வந்த திருவிழாக்களையும், புண்ணிய தினங்களையும் அதிவிமரிசையாகக் கொண்டாடி வந்தனர். அப்பொழுது ஏராளமான பஜனைக் கோஷ்டிகள், தண்ணிர்ப் பந்தல்கள், தான தருமங்கள், சமாராதனை முதலியவை அபரிமிதமாக நடத்தப் படுவதுண்டு.

நமது திவான் சாமியார் பாபநாசத்திற்குப் போய்த் திரும்பி வந்து கண்டியூரின் வழியாகச் சென்று கொண்டிருந்த அன்றைய தினம் அந்த ஊர் விஷ்ணு கோவிலில் வெண்ணெய்த் தாழி சேவையாதலால், சூரியன் உதயமாகும்பொழுதே சுவாமியை முத்துப் பல்லக்கில் வைத்து, அற்புதமாக அலங்கரித்துப் பாதாதி கேசம் வரையில் வைர ஆபரணங்கள் வைர முடி முதலிய வற்றையும் ரோஜா, ஜாதி மல்லிகை முதலிய புஷ்ப மாலைகளை யும் அணிவித்து, கையில் தங்கக் குடத்தைப் பொருத்தி, கிருஷ்ண பகவானாகிய குழந்தை தவழ்ந்தபடி இடது கையால் குடத்தைப் பிடித்துக்கொண்டு வலது கையால் வெண்ணெயை எடுத்துத் தமது விளையாட்டுத் தோழர்களுக்குக் கொடுக்கும் பாவனையை நன்றாகக் காட்டி இருந்த காட்சி கண்கொள்ளா அதிசயக் காட்சியாக இருந்தது. தவழ்ந்தபடி இருந்த தெய்வீகக் குழந்தை