பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 31

அவர் எவ்விடத்திலாவது விஷ்ணு கோவிலைக் கண்டால் அதன் வாசலில் நின்றபடி, பெருமாளை நமஸ்கரித்துவிட்டுப் போவது வழக்கம். எங்கேயாவது வீதிகளில் சுவாமி ஊர்வலம் வரக் கண்டால், அப்பொழுதும் அவர் நமஸ்காரம் செய்துவிட்டுப் போவது வழக்கம். ஆகவே, அவ்வளவு விமரிசையாக நடத்தப் பட்ட அந்த ஊர்வலத்தைக் காண, திவானும் பக்திப் பெருக்கு அடைந்து பூரித்துப்போய்த் தம்மை மறந்து தமது கைகளை எடுத்துக் குவித்துப் பெருமாளை நமஸ்கரித்து, ‘சுவாe பெருமாளே! நான் முக்கியமான கருத்தோடு அவசரமாய்ப் போகையில், நீர் வழிமறிந்து நிற்பது, என் எண்ணம் பலிதமடையக் கடவதென்று ஆசீர்வதிப்பது போலத் தோன்றுகிறது. பகவானே! எனக்கு நீர்தான் துணையிருந்து என் கோரிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும். நான் எவ்வளவுதான் முயன்று பாடுபட்டாலும் உமது அருள் இருந்தாலன்றி, எதுவும் கைகூடாது கிருஷ்ண பரமாத் மாவே! நீரே கதி!’ என்று தமக்குத் தாமே பலவாறு வேண்டிக் கொண்டு ஸ்தோத்திரம் செய்தபின் கும்பலுக்குள் புகுந்து மேலும் வடக்குத் திக்கில் செல்ல ஆரம்பித்தார். மற்ற எல்லோரும் ஸ்நானம் செய்து சுத்தமாக இருந்தனராதலால், தாம் அவர்களுக் கிடையில் அசுசியாக இருந்தது அவருக்கு நிரம்பவும் துன்பகரமாக இருந்தது. ஆகையால், தாம் சீக்கிரம் அவர்களைக் கடந்து அப்பால் போய்விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார். அந்த ஊர்வலமும் ரஸ்தாவோடு வடக்குத் திக்கில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. ஆகவே, அவர் அந்தக் கும்பலைவிட்டு அப்பால் செல்லும்பொருட்டு நிரம்பவும் விசையாக ஜனங் களுக்குள் நுழைந்து போகவேண்டிருந்தது. சுவாமி தரிசனத்தின் பொருட்டு புதிய ஜனங்கள் நாற்புறங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்தமையால் திவான் சாமியாருக்கு முன்னும் பின்னும் பக்கங்களிலும் ஜனங்கள் புகுந்து நெருக்கியபடி இருந்தனர். அந்தக் கூட்டத்தில் ஆண்பாலர், பெண்பாலர், குழந்தைகள் முதலிய சகலரும் வித்தியாசமின்றி நெருங்கியிருந்தனர். அவ்வாறு ஊர்ந்து சென்ற ஜனக் கும்பலுக்குள் நமது திவான் சாமியார் அகப்பட்டு அதைக் கடந்து வெளியில் போய்விட வேண்டுமென்று விரைந்து முன்னால் சென்று கொண்டிருக்க, தெரு சிறிது குறுகலாக இருந்த ஒரிடத்தில் ஜனங்கள் செல்ல மாட்டாமல்