பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செளந்தர கோகிலம்

செலவுகள் நீங்கலாய்ப் பதினாயிரம் ரூபாய் . அவரே அந்த ஊரில் முதலாவது மிராசுதார் என்று நன்கு மதிக்கப்பட்டி ருந்ததன்றி, சகலமான விவகாரங்களிலும் அவருக்கே முதல் மரியாதையும் அபாரமான செல்வாக்கும் ஏற்பட்டிருந்தன. அவ்வளவு பெருமைப்பாடு வாய்ந்த கிராமத் தலைவரது குழந்தை யின் மீதிருந்த நகையைக் களவாடிவிட்டான் என்ற செய்தியும் களவாடியவன் குழந்தையின் கழுத்தில் இரத்தக் காயம் உண்டாக்கிவிட்டான் என்ற செய்தியும் வெகு துரிதத்தில் பரவவே தோட்டங்களிலிருந்த அவரது ஆள்கள் சுமார் நூறு பேர் கையுந்தடியுமாக ஓடிவந்துவிட்டனர். அந்த மிராசுதார் அன்றைய தினம் ஏதோ அவசர காரியத்தின் பொருட்டு வெளியூருக்குச் சென்றிருந்தார். ஆதலால், அவர் மாத்திரம் காணப்படவில்லை. அவர் ஊரில் இருந்திருந்தால், அவரது மனையாட்டி அவ்வாறு தனியாக அவ்வளவு பெரிய ஜனக் கும்பலில் போக அவர் அநுமதி கொடுத்திருக்கவே மாட்டார். அவர் இல்லாமையால், அந்த அம்மாள் வெண்ணெய்த் தாழி சேவையைப் பார்க்க வேண்டு மென்ற ஆத்திரத்தில் சிறிதும் யோசியாமல் அவ்வாறு ஜனக் கும்பலில் போய் நுழைந்து விட்டாள். நுழைந்தது நெருக்கடியான இடமாதலால், அவ்விடத்தில் குழந்தையின் கழுத்துச் சங்கிலியும் கை மோதிரமும் ஒரு நிமிஷத்தில் களவாடப்பட்டுப் போயின. ஆகவே, ஜனங்கள் மிகுந்த ஆவேசமும், கோபமும் அடைந்து நமது திவான் சாமியாரைப் பிடித்து நிரம்பவும் வதைத்துப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்த சப் இன்ஸ்பெக்டருக்கு முன்பாக நிறுத்தினார்கள். மேலப் பண்ணை முதலியாரின் சம்சாரமும் குழந்தையும் ஒரு வண்டியில் உட்கார்ந்துகொண்டு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். நமது திவான் சாமியாரது அப்போதைய மனநிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை வாசகர்கள் மனதால் பாவித்துக் கொள்வதே சுலபமானது. தாம் உலகைத் துறந்த பரதேசி யென்றும், தாம் திருடவில்லையென்றும் முதலில் திவான் சாமியார் கூறிப் பார்த்தார். அவர்கள் தம்மைச் சோதனை செய்து பார்த்துவிட்டு விடுவார்கள் என்று நினைத்ததற்கு மாறாக தமது அங்கிப் பைக்குள்ளிருந்து தங்கச் சங்கிலித்துண்டு அகப்பட்டதைக் காண அவரே பிரமித்துப் போய்த் திருட்டு விழி விழிக்கத்