பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 35

தொடங்கினார். அது கண்கட்டு வித்தையாயிருக்குமோ அல்லது தமது கை ஒருகால் தமக்குத் தெரியாமல் நீண்டுபோய் அந்தத் திருட்டை நடத்தி இருக்குமோ என்று நமது சாமியார் பலவாறு நினைத்து, சித்தப் பிரமை கொண்டவர்போலத் தோன்றி இழுத்த இடத்திற்கெல்லாம் பேசாமல் வரத்தொடங்கினார். தாம் திருடியதாக அவ்வளவு பரிஷ்காரமான சாட்சி ஏற்பட்ட பிறகு தாம் இல்லை என்று எப்படி மறுக்கிறது, மறுத்தாலும் மற்றவர் களுக்கு அது எப்படித் திருப்தியளிக்கும் என்று தமக்குத் தாமே ஆக்ஷேபணை சமாதானம் செய்து கொண்டு ஊமை போல இருந்து அவர்கள் கொடுத்த அடிகளை நிரம்பவும் பொறுமை யோடு ஏற்றுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தார்.

அவ்விடத்திலிருந்த சப் இன்ஸ்பெக்டரிடம் விவேகம் பகுத்தறிவு பொறுமை முதலிய மூன்றையும் தவிர மற்ற குணங்கள் பூர்த்தியாக இருந்தன. ‘காளை மாடு கன்று போட்டிருக்கிறது’ என்று யாராவது சொன்னால், “சரி, தாயையும் கன்றையும் கொட்டிலில் கட்டி மருத்துவம் பாருங்கள்’ என்று சப் இன்ஸ் பெக்டர் உடனே உத்தரவு பிறப்பித்து விடுவார். அத்தகைய அதிமேதாவிக்கு எதிரில் நமது திவான் சாமியார் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டவராய் நிறுத்தப் படவே, அவர் மிகுந்த ஆவேசமும் கோபமும் கொண்டவராய், ‘ஆ அப்படியா இவனா திருடினான் ஆளைப் பார்த்தால், பெரிய பூச்சாண்டிபோல பலமாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறானே அடே பரதேசி நாயே! உனக்கென்னடா கேடு காலம்! பெரிய மனிதர் வீட்டுப் பெண் பிள்ளை சுவாமி தரிசனத்துக்கு வந்தால், நீ அங்கே போய் இப்படிப்பட்ட காரியத்தையா செய்கிறது? எங்கடா சங்கிலியின் இன்னொரு பாகமும் வைர மோதிரமும்? மரியாதையாக நிஜத்தைச் சொல்லிவிடு. இல்லாவிட்டால், போலீஸ் பலகாரம் சாப்பிட்டு வீணாய் மாண்டு போவாய்” என்று அதட்டி சிம்ம கர்ச்சனை செய்தார்,

அவரது மனப் போக்கையும் அவசர புத்தியையும் கண்ட திவான் தாம் அவரிடத்தில் எவ்விதமாகத் தமது உண்மையைத் தெரிவித்துக் கொள்ளுகிறது என்ற மலைப்பும் கவலையும்