பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 37

இருந்தன. உடனே போலீஸார் அவைகளை எண்ணிப் பார்த்தனர். 167 நோட்டுகள் இருந்தன. திவான் சாமியார் திருவனந்தபுரத் திலிருந்து புறப்பட்ட காலத்தில் 2 லக்ஷம் ரூபாய்க்கு நோட்டுகள் வைத்திருந்தாரென்று சொன்னோம் அல்லவா. அவைகளில் அவர் அதுவரையில் முப்பத்திமூன்று நோட்டுகள்தான் எடுத்து மாற்றிச் செலவு செய்திருந்தார். கடைசி நோட்டு மாற்றியதில் மிஞ்சி யிருந்த பணத்தைத் தமது தந்தையிடம் கொடுத்துவிட்டுத் தமது பிரயாணச் செலவுக்கு ஒர் ஐந்து ரூபாயை மாத்திரம் எடுத்து வந்திருந்தார். அதில் மிச்சமான சில்லரை அவரது அங்கிப் பையில் இருந்தது. கையில் திருவோடு முதலியவற்றுடன் பிச்சைக் காரனைப் போலக் காணப்பட்ட பரதேசியிடம் முப்பத்தி மூவாயிரம் குறைய இரண்டு லக்ஷம் ரூபாய் இருப்பதென்றால், அந்த மனிதன் பெருத்த கொள்ளைக்காரனாகத்தான் இருக்க வேண்டுமென்றும், அவன் சந்நியாசி வேடம் போட்டுக் கொண் டிருந்தபடியே பல இடங்களில் கொள்ளையடித்து அவ்வளவு பெருத்த பணத் தொகையைச் சேர்த்து வைத்திருக்க வேண்டு மென்றும் மேலப்பண்ணை முதலியாருடைய குழந்தையின் நகைகளை அவன் கழற்றினான் என்பதைப் பற்றிச் சந்தேகமே இல்லையென்றும் போலீசாரும் மற்ற ஜனங்களும் உடனே நிச்சயித்துக் கொண்டதன்றி, அவன் மகா அபாயகரமான முரட்டுத் திருடனாகத்தான் இருக்க வேண்டுமாதலால், அவனை உடனே நியாயஸ்தலத்திற்குக் கொண்டு போய்த் தண்டனை செய்வித்து சிறைச்சாலைக்கு அனுப்பிவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டனர். -

சப் இன்ஸ்பெக்டர் திவான் சாமியாரை நோக்கி அவரது பெயர் என்னவென்று வினவினார்.

திவான் சாமியார், ‘ஐயா! நான் உலகைத் துறந்து ஆறேழு வருஷ காலமாகிறது. அப்போது என்னுடைய பெயரையும் நான் துறந்துவிட்டேன். இப்போது எனக்குப் பெயரே இல்லை. என்னை எல்லோரும் பரதேசி அல்லது சாமியார் என்றுதான் கூப்பிடுகிறார்கள். அதுதான் இப்போது என் பெயராக வழங்குகிறது” என்றார்.