பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 செளந்தர கோகிலம்

அதைக்கேட்ட சப் இன்ஸ்பெக்டர் நிரம்பவும் கோபங் கொண்டு, “ஒகோ! உனக்குப் பெயர் இல்லையோ சரிதான்! நீ நல்ல பக்காத் திருடனென்பது நன்றாகத் தெரிகிறது. நீ இதற்கு முன் பல தடவைகளில் தண்டனை அடைந்திருக்க வேண்டு மென்றே நான் எண்ணுகிறேன். உன்னுடைய கைரேகை அடை யாளத்தை எடுத்து இதோ நான் மேலதிகாரிகளுக்கு அனுப்பப் போகிறேன். அது போனால், உன்னுடைய பூர்வோத்திர மெல்லாம் உடனே தெரிந்து போகிறது! நீ உன் பெயரைச் சொல்ல வேண்டாம். பத்திரமாக மூடி வைத்துக் கொள். அதிருக் கட்டும். உன்னுடைய சொந்த ஊர் இன்னதென்றாவது சொல்லு வாயோ, மாட்டாயோ?” என்று நிரம்பவும் அருவருப்போடு கேட்டார். திவான் சாமியார் பெருந்தன்மையாகப் புன்னகை செய்தவராய், “பரதேசி என்பதிலேயே என்னுடைய ஊர் இன்னது என்பதும் அடங்கியிருக்கவில்லையா? அதன் அர்த்தத்தையே கவனித்துத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

அதைக்கேட்ட சப் இன்ஸ்பெக்டர் முன்னிலும் அதிகரித்த கோபாவேசம் அடைந்து பல்லை நறநறவென்று கடித்து, “ஒகோ: அப்படியா! நீ மகா குறும்பனாக இருக்கிறாயே! இன்றைய தினம் மாத்திரம் பொறுத்துக் கொள். நாளைய தினம் நீ தஞ்சாவூர் முந்திரித் தோப்பு ஜெயிலுக்குள் போய்ச் சேர்ந்துவிடுவாய். அதுதான் உனக்குத் தகுந்த இடம். அங்கே போய் எந்திரத்தில் மாவரைத்தால், கருவமெல்லாம் வெகு சீக்கிரத்தில் அடங்கிப் போகும்” என்று கூறினார். -

அதைக் கேட்ட திவான் சாமியார் கம்பீரமான முகத் தோற்றத்தோடு நின்று, ‘எம்பெருமான் செயல். அவர் திருவுளம்பற்றி எந்த உத்தியோகத்தை நமக்குக் கொடுக்கிறாரோ, அதை நாம் சந்தோஷத்தோடு உடனே ஏற்றுக்கொண்டு தீர வேண்டும். அவர் பார்த்து நம்மைப் பெரிய மகாராஜனுடைய பதவியில் வைத்தால், அப்போது நாம் எவ்வளவு சந்தோஷம் அடைவோம். மாவரைக்கும் உத்தியோகத்தைக் கடவுள் நமக்குக் கொடுத்தால், அப்போதும் நாம் சந்தோஷமாக அதைச் செய்ய வேண்டியதுதான். நாம் அரைக்கும் மா எத்தனை மனிதருடைய பசியை நிவர்த்திக்கும்! அதுவும் ஒரு சத்கருமந்தானே’ என்றார்.