பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 39

உடனே சப் இன்ஸ்பெக்டர் திவான் சாமியாரது கைரேகை அடையாளத்தை எடுத்து மேலதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டு நாலைந்து சாட்சிகளின் வாக்கு மூலங்களை வாங்கி திவான் சாமியார் மீது பிராது தயாரித்து அதைக் கண்டியூருக்கு சம்பந்தப் பட்ட நீதிபதிக்கு அனுப்பியதன்றி திவான் சாமியாருக்கும் கைவிலங்கு பூட்டி கத்தி துப்பாக்கிகளுடன் இருந்த இரண்டு ஜெவான்களுடன் அவரை நீதிபதியின் கச்சேரிக்கு அனுப்பி வைத்தார்.

நீதிபதி அந்த வழக்கைப் படித்துப் பார்த்துவிட்டு, அதன் விசாரணையைத் தாம் மறுநாட்காலை பதினொரு மணிக்கு எடுத்துத் துவக்குவதாய்க் கூறி, சாட்சிகளும், கைதியும் அப்பொழுது வந்து சேரவேண்டுமென்று உத்தரவு செய்தார். உடனே ஜெவான்கள் நமது திவான் சாமியாரை அவ்விடத்திலிருந்து அழைத்துப்போய் விசாரணைக் கைதிகளை வைக்கும் சப் ஜெயிலில் அடைக்க, அதன் காவற்காரன் தடித்த இரும்புக் கம்பிகளால் ஆன அதன் கதவுகளை முடி வெளியில் பூட்டிவிட்டான். திவான் சாமியார் மறைவான ஒரு மூலைக்குப் போய்த் தரையின் மீது உட்கார்ந்து கொண்டார். அவரது மனத்தில் பல வகையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் எழுந்து உலப்பத் தொடங்கின. ‘ஈசா! இதுவும் உன் திருவிளையாடலா! என்னைத் திருடனாக்கி, சிறைச்சாலைக்குள் அனுப்பி என் அழகைப் பார்க்க வேண்டுமென்பது உன் திருவுள்ளமா அதையும் பார்த்துவிட்டாய். இப்போது உன் மனம் குளிர்ந்ததா? நீ எப்படிப்பட்ட இழிவுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாக்கினாலும், அது அக்கிரமமென்று சொல்ல நான் அருகனல்லன். நீ செய்வ தெல்லாம் நீதியான காரியமாகத்தான் இருக்கும். அதன் உள் கருத்தை யூகித்தறிந்து கொள்ளத்தக்க ஞானம் எனக்கு இல்லை யென்று சொல்ல வேண்டுமேயன்றி, வேறு எதையும் நான் சொல்வது சரியல்ல. நான் திவானாயிருந்த காலத்தில் எத்தனையோ சப் இன்ஸ்பெக்டர்களும், சூபரின்டென்டெண்டு களும், நீதிபதிகளும் எனக்கெதிரில் வந்து கைகட்டி வாய் புதைத்து நின்று என்னை வணங்கும்படிச் செய்ததும் நீயே. இப்போது, அந்த நிலைமையைத் தலைகீழாய் மாற்றியிருப்பதும்