பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 செளந்தர கோகிலம்

எவ்வித சமாதானம் கூறினாலும், அது செல்லுபடியாகா தென்றும் அவர் உணர்ந்தார். தாம் அந்தக் குற்றத்தைச் செய்ய வில்லையென்று ருஜுபடுத்தத் தமக்கு எவரும் சாட்சி இல்லை. ஆகவே, மறுநாள் தாம் தப்புவது துர்லபம் என்ற எண்ணமே அவரது மனத்தில் அடிக்கடி தோன்ற ஆரம்பித்தது. தமக்கு நேரிட்ட கதியைத் தாம் தமது தந்தையிடம் தெரிவித்தால், அதுவே அவரைக் கொன்றுவிடுமென்றும் திவான் சாமியார் நினைத்தார். தாம் தமது இருப்பிடத்தை அவருக்குத் தெரிவிக்காமலேயே வருஷக் கணக்கில் அல்லது மாதக்கணக்கில் சிறைச்சாலையில் இருந்தால், அவர் தம்மைப்பற்றி அபாரமான கவலையும் எற்றமும் விசனமும் அடைந்து தம்மைத் தேடப் புறப்பட்டு விடுவார் என்றும், அதனால், அவருக்கு ஏதேனும் பெருத்த பொல்லாங்கு சம்பவிக்கு மென்றும் அவர் உறுதியாக எண்ணினார். ஆகவே, அவர் விவரிக்க வொண்ணாத அபாரமான சஞ்சலங்கொண்டு நரகவேதனை அடைந்து அன்றைய இரவைப் போக்கினார்.

மறுநாட்காலையில் காவற்காரர்கள் வந்து அதே கட்டிடத்தின் ஒரு பக்கத்தில் இருந்த கிணற்றண்டை அவரை அழைத்துப் போய் அவரது காலைக் கடமைகளை முடித்துக் கொள்ளும்படிக்கூற, அவர் தமது ஸ்நானத்தை முடித்துக் கொண்டு லக்ஷணமாய் விபூதி தரித்து தமது நியம நிஷ்டைகளைச் சுருக்கமாக முடித்து இரண்டொரு கை தண்ணீர் அருந்திவிட்டு மறுபடி சிறைச்சாலைக்குப் போய்ச் சேர்ந்தார்.

அன்றைய தினம் காலை சரியாகப் பதினொரு மணிக்கு நீதிபதி கச்சேரிக்கு வந்து சேர்ந்து, அந்தத் திருட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இரண்டு போலீஸ் ஜெவான் களினிடையில் தலை குனிந்தவராய் வந்த திவான் சாமியார் கைதிக்கூண்டில் நிறுத்தப்பட்டார். அந்த வழக்கில் சர்க்கார் கட்சியை நடத்தும்பொருட்டு பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் வந்து தயாராகக் காத்திருந்தார். அந்த நியாய ஸ்தலத்தைச் சார்ந்த வக்கீல் களெல்லோரும் அந்த வேடிக்கையான வழக்கைக் கவனிக்க வேண்டுமென்று நிரம்பவும் ஆசையோடு உட்கார்ந்திருந்தனர். மேலப்பண்ணை முதலியாருடைய குழந்தையின் ஆபரணங்களை யாரோ ஒரு சாமியார் கழற்றிக் கொண்டாரென்றும், அவரிடம்