பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 43

லக்ஷக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள் அகப்பட்ட தென்றும், ஜனங்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டதில், அந்தச் செய்தி வெகுதூரம் வரையில் எட்டிப் போனமையால், விசாரணை காலத்தில் வேடிக்கை பார்க்க வேண்டுமென்று பல்லாயிரக்கணக்கில் ஜனங்கள் வந்து கச்சேரிக்குள்ளும், அதற்கு வெளியிலும், அடர்ந்து போயினர். காஷாய வஸ்திரம், ஜடைகள் முதலிய சந்நியாசிக் கோலத்துடன் இருக்கும் ஒருவன் திருடி விட்டானென்ற செய்தி மிகுந்த வியப்பை உண்டாக்கியது. ஆகையால், அதைக் கேள்வியுற்ற மற்ற பரதேசிகளும், பிச்சைக் காரர்களும்கூட வேடிக்கை பார்க்கும்பொருட்டு கச்சேரிக்கு வந்து சேர்ந்துவிட்டனர். திவான் சாமியார் உண்மையில் நகை களைத் திருடிவிட்டாரென்றே சகலமான ஜனங்களும் உறுதியாக நம்பி இருந்தனர். ஆதலால், பெருத்த மகானைப் போன்ற தோற்றத்தோடு இருந்த மனிதர் அத்தகைய தீய காரியத்தை நடத்திவிட்டாரே என்ற ஆத்திரமும், பதைப்பும் காட்டி, “காலம் கலிகாலமையா இப்படிப்பட்ட அக்கிரமம் நடந்தால், மழை ஏன் பெய்யும்? முன் காலத்தில், இராவண சந்நியாசி, அர்ச்சுன சந்நியாசி என்று ஏற்படவில்லையா அவர்கள் பெண் பிடிக்கும் சந்நியாசிகள் இவர் கழுத்துமணி அறுக்கும் சந்நியாசி! இப்பேர்ப் பட்டவர்களை யெல்லாம் இலேசில் விடக்கூடாது. குதிரைச் சவுக்கை எடுத்துக் கொண்டு இரத்தம் பீரிட்டு அடிக்கிற வரையில் சக்கை சாறாய்ச் செய்துவிட வேண்டும். அதோடு இரண்டு வருஷம் மூன்று வருஷம் கடுங்காவல் தண்டனையும் கொடுத்துவிட வேண்டும். நியாயாதிபதி என்ன செய்யப் போகிறாரோ பார்க்கலாம்’ என்று பலவாறு ஆத்திரமொழிகளை உபயோகித்த வண்ணம் விசாரணையின் தொடக்கத்தை நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

விசாரணை துவக்கமாயிற்று. பிராசிசுடிங் இன்ஸ்பெக்டர் உடனே எழுந்து நின்று அந்த வழக்கின் சாராம்சத்தை எடுத்துக் கூறத் தொடங்கி, ‘நீதிபதியவர்களே! இந்த வழக்கில் அதிக சிக்கலான அம்சம் எதுவும் இல்லை. விஷயம் வெகு சுலபமானது. இந்தக் குற்றம் நடந்ததைப் பார்த்ததற்கு ஆயிரக்கணக்கில் சாட்சிகள் இருக்கிறார்கள். ஏராளமான சாட்சிகளைக் கொணர்ந்து