பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 செளந்தர கோகிலம்

கொள்ள, குமாஸ்தா சாட்சிப் பிரமாணத்தை அந்த அம்மாள் சொல்லும்படி செய்தார்.

பிறகு அந்த அம்மாள் தனது வாக்குமூலத்தைக் கொடுக்குத் தொடங்கி, முதல் நாள் தான் குழந்தையுடன் சுவாமி தரிசனம் செய்யப்போனது. நகைகளை இழந்து கூச்சலிட்டது. சாமியாரது சட்டைப் பையிலிருந்து நகை அகப்பட்டது முதலிய விவரங்களை அதற்கு முன் பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் கூறியதுபோல எடுத்துரைத்தாள்.

உடனே நீதிபதி திவான் சாமியாரை நோக்கி, ‘ஐயா இந்த அம்மாள் வாக்குமூலம் கொடுத்ததைக் கேட்டீரே இந்த அம்மாளிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீரா?” என்றார். அதைக்கேட்ட திவான் சாமியார் சாட்சிக் கூண்டில் நின்ற ஸ்திரியைப் பார்த்து நிரம்பவும் மரியாதையாகவும் அன்பாகவும் பேசத் தொடங்கி, தாயே! உங்களைப் பார்த்தால் மகாலகடிமி போல இருக்கிறது. நீங்கள், நிரம்பவும் பாக்கியசாலியென்பதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. இருந்தாலும், நீங்கள் ஏராளமான நகைகளையணிந்து குழந்தையை எடுத்துக் கொண்டு இவ்வளவு பெருத்த ஜனக் கும்பலில் வந்ததனால், உங்களுக்கு என்னென்ன சங்கடங்கள் வந்தன பார்த்தீர்களா? பல ஜனங்களுக்கு எதிரில் கச்சேரி வரையில் ஏறும்படியான துன்பத்தை, உங்களுடைய செய்கைதான் உண்டாக்கியது தாயே! உங்களுக்கு நான் அனந்த கோடி தரம் நமஸ்காரம் செய்கிறேன். இனிமேல் இந்த மாதிரி காரியம் செய்யாமல் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். இவ்வளவுதான் நான் உங்களுக்குச் சொல்லத் தக்கது. இதைத் தவிர, நான் உங்களிடம் என்ன கேள்வியைக் கேட்கப் போகிறேன். நடந்ததை நடந்தபடி நீங்கள் சொல்லிவிட்டீர்கள். அம்மா! தாயே! நீங்கள் இங்கே நிற்க வேண்டாம். முன்னால் வீட்டுக்குப் போங்கள் என்று நிரம்பவும் பரிவாகக் கூறி நமஸ்கரித்தார்.

அதைக்கேட்ட நீதிபதியும், மற்ற ஜனங்களும் திவான் சாமியார் ஒரு வேளை பைத்தியக்காரராய் இருப்பாரோ என்று சந்தேகத்தைக் கொண்டனர். கைதி கூறிய ஒவ்வொரு வார்த்தை யையும் அவருக்கு விரோதமாகவே வியாக்கியானம் செய்யத்