பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 51

தயாராகக் காத்திருந்த பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர் முன்னிலும் அதிக ஆக்கிரோஷத்துடன் எழுந்து நீதிபதியை நோக்கி, மேஜையைப் பலமாகத் தட்டி, “இந்தக் கைதியின் நடத்தையை நான் பலமாக ஆக்ஷே பிக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே இவர் குத்தலாகவும், குறும்பாகவுமே சாகூதிகளைத் தூவிக்கிறார். கனம் கோர்ட்டார் இதற்கு இடம் கொடுக்கக் கூடாது’ என்று கூறி விட்டுக் கடுகடுத்த முகத்தோடு உட்கார்ந்து கொண்டார்.

உடனே நியாயாதிபதி திவான் சாமியாரைப் பார்த்து, ‘ஏனையா இப்படியெல்லாம் தாறுமாறாக நடந்துகொள்ளுகிறீர்? இது சட்ட சம்பந்தமான விவகாரங்களுக்கு மாத்திரம் இடங் கொடுக்கும் நியாய ஸ்தலமென்பது உமக்குத் தெரியாதா? ஏன் இப்படிப் பைத்தியம் பிடித்தவர்போல சம்பந்தா சம்பந்த மில்லாமல் பேசுகிறீர்?’ என்றார்.

உடனே திவான் சாமியார் நிரம்பவும் பணிவாகவும் மரியாதையாகவும் பேசத் தொடங்கி, ‘திருட்டு என்பதையே சொப்பனத்திலும் நினைக்காதவன் திருடனாவதும், சன்மார்க்கத் தையும், உண்மையையும் எடுத்துச் சொல்பவன் பைத்தியக்கார னாவதும், மரியாதையாகவும், வணக்கமாகவும் பேசுவது அவதூறும் துாஷணையும் ஆவதும் கால பலனேயன்றி, எப்போதும் நேரக் கூடியவைகளல்ல. குறுக்கு விசாரணை செய்யும்படி தாங்கள் கேட்டால், நான் இப்படித்தான் டைத்தியக்காரன்போல எதையாவது உளறி வைப்பேன். தாங்கள் என்னைக் கேட்காம லேயே இந்த விசாரணையை முடித்துத் தங்களுடைய தீர்ப்பைச் சொல்லிவிடுங்கள் என்றார்.

அதைக் கேட்ட நீதிபதி பிராசிகூடிங் இன்ஸ்பெக்டரை நோக்கி, ‘பார்த்தீரா? இப்போது என்னிடமே குத்தலாகப் பேசுகிறார். இவருடைய சுபாவமே இதுதான் போலிருக்கிறது. இவர் பைத்தியமாகவுமில்லை, தெளிவான அறிவுடைய வராகவும் தோன்றவில்லை; இரண்டுங்கெட்டான். சரி, நாம் விசாரணையை மேலே நடத்துவோம்” என்று கூறினார்.

திவான் சாமியார் எவரும் எதிர்பார்க்காதபடி ஏதோ வார்த்தைகள் சொல்வதை பிராசிகூடிங் இன்ஸ்பெக்டர்