பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 53

இந்த சாட்சிகள் இவ்வளவு தூரம் அநாவசியமாக வந்து அலைய வேண்டியதே இல்லை; நீதிபதிக்கும் அநாவசியமான சிரமம் ஏற்படவேண்டிய அவசியமே இல்லை. குழந்தையின் மேலிருந்த நகைகள் களவாடப்பட்டனவென்பது உண்மையான சங்கதி. அதில் ஒரு பாகம் என் சட்டைப் பையில் இருந்தது. அதை நான் திருடிப் போட்டுக் கொண்டேன் என்று யாரும் சொல்லவில்லை. அது எப்படி என் பைக்குள் வந்ததென்பது எனக்கே தெரியவில்லை. நகைகளை அபகரித்த திருடன் பக்கத்திலிருந்த என் பையில் இந்தத் துண்டைப் போட்டுவிட்டுப் போயிருப்பானென்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், ஜனங்கள் என்னைப் பிடித்துக் கொண்டு, தன்னைத் துரத்தாமல் இருந்துவிடட்டும் என்றும், அதற்குள் தான் ஒடிவிடலாம் என்றும் எண்ணியே அவன் இப்படிச் செய்திருக்க வேண்டும். ஆனால் இது யூகமேயன்றி அவன் என் பையில் போட்டதை நானும் பார்க்கவில்லை. அதனால் தான் என் நியாயம் எனக்கே விளங்கவில்லையென்று நான் கொஞ்சநேரத்துக்கு முன் சொன்னது. ஆனால் உங்களுடைய சட்டம் வேறு மாதிரியாக இருக்கிறது. திருட்டுச் சொத்து எவனிடத்திலாவது இருந்து அகப்பட்டால், அது நியாயமான வழியில் தன்னிடம் வந்து சேர்ந்ததென்று ருஜூப்படுத்த வேண்டியது, அதை வைத்துக் கொண்டிருப்பவனைச் சேர்ந்த பொறுப்பு என்பதும் உங்கள் சட்டத்தின் விதி; அதன்படி பார்த்தால் நான் குற்றவாளியாகிறேன் என்பதில் சந்தேகமில்லை. நீதிபதி : சரி; நான் சொல்ல வேண்டியதையெல்லாம் நீரே சொல்லிவிட்டீர். அப்படியானால், உமக்குச் சாதகமாக சாட்சி சொல்லக் கூடியவர்கள் யாருமில்லையா? நான் தீர்ப்பை எழுதலாமா?

திவான் சாமியார் : எனக்கு மனிதர் யாரும் சாட்சி யில்லை. தெய்வந்தான் சாட்சி. நேற்று இந்தத் திருட்டு நடந்ததைப் பார்த்துக்கொண்டே வந்த பெருமாள் நிஜமான தெய்வம் என்பதைப் பற்றி சந்தேகமே இல்லை. அவரைத்தான் நான் நம்பி இருக்கிறேன். அவர் எப்படியும் வந்து நிஜத்தை மெய்பிப்பார்.

நீதிபதி : சட்டப்படி வியவகாரம் நடக்கையில், இந்த மாதிரி சொல்வதில் என்ன அநுகூலம் ஏற்படப் போகிறது.