பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 செளந்தர கோகிலம்

பிரயோசனமில்லை. நான் என் தீர்மானத்தை எழுதுகிறேன் - என்று கூறித் தமது பேனாவை எடுத்துத் தீர்ப்பு எழுதத் துவக்கினார். நியாயாதிபதி தாம் குற்றவாளி என்று தீர்மானித்து விட்டாராதலால், தம்மை ஒரு வருஷ காலத்திற்காவது தண்டித்து விடப்போகிறாரென்று திவான் தீர்மானித்து கொண்டார். மற்ற ஜனங்களும் அது போலவே எண்ணிக் கொண்டனர். .

காகிதத்தை எடுத்து இரண்டொரு வரிகள் எழுதிய நீதிபதி உடனே நிறுத்திவிட்டு திவான் சாமியாரை நோக்கி, “ஐயா! இன்னொரு கேள்வி. நீர் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாய் 167 நோட்டுகள் வைத்திருந்தீரே; அவைகள் உம்மிடம் வந்தவகை யென்ன? நீர் சாமியாரான பொழுது அதற்கு முன் உம்மிடமிருந்த சொத்துகளை யெல்லாம் துறந்துதானே காஷாயம் வாங்கிக் கொண்டீர்? அதன் பிறகு நீர் என்ன தொழில் அல்லது வர்த்தகம் செய்தீர்? உமக்கு இவ்வளவு அபாரமான பொருள் எப்படிக் கிடைத்தது?’ என்றார்.

அதே சமயத்தில் பிராசிசுடிங் இன்ஸ்பெக்டரும் எழுந்து நியாயாதிபதியை நோக்கி, “இன்னொரு விஷயமும் இருக்கிறது; இந்த வழக்கின் முதல் சாட்சியான மேலப்பண்ணை முதலியார் வாக்குமூலம் கெர்டுத்த காலத்தில், அவர் பொய் வாக்கு மூலம் கொடுத்ததாக இவர் சொன்னார். அதுவும் தவறென்ற விஷயத்தை நீதிபதியவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் விளக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் தக்க பெரிய மனிதருடைய கண்ணியத்தை அது பாதிக்கும். அதுவுமன்றி அவருடைய சம்சாரம் வாக்குமூலம் கொடுத்த காலத்தில் மகா பாக்கியசாலி என்றும் மகாலக்ஷ்மி என்றும் வஞ்சகப் புகழ்ச்சி செய்து துரஷித்திருக்கிறார். அவைகளுக் கெல்லாம் இவர் பகிரங்கமான மன்னிப்புக் கேட்டுக்கொள்ளச் செய்யவேண்டும்” என்றார்.

உடனே திவான் சாமியார் நிரம்பவும் வணக்கமாக நியாயாதிபதியை நோக்கி, “முதல் சாட்சி மேலப்பண்ணை முதலியாரை முடிவில் குறுக்கு விசாரணை செய்யலாமென்று தாங்கள் எனக்கு அநுமதி கொடுத்திருக்கிறீர்கள். ஐந்து நிமிஷ: நேரம் அவரைத் தாங்கள் மறுபடி வரவழைத்துக் கூண்டின்மேல்